மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த பொல்லார்ட் இவர்தான் – இந்திய வீரர் பேட்டி!

0
4015

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பொல்லார்ட் இல்லாத குறையை இவர் தான் தீர்த்து வைப்பார் இன்று பேட்டியளித்துள்ளார் ஹனுமா விகாரி.

கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடி வந்த கீரன் பொல்லார்ட் இரு தினங்களுக்கு முன்பு, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

இதற்கு காரணம், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டத்தில் பொல்லார்ட் இல்லை. ஆகையால் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அவரை அணியிலிருந்து நீக்குவதற்கு முடிவு செய்துவிட்டனர். “நான் மும்பை அணிக்காக விளையாடவில்லை என்றால், வேறு எந்த அணிக்காகவும் விளையாட மாட்டேன்.” என்று திட்டவட்டமாக கூறிய பொல்லார்ட், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார்.

இதற்கு பிரதிபலனாக பொல்லார்டை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை அணிக்காக மிடில் ஆர்டரில் பொல்லார்ட் கொடுத்திருக்கும் பங்களிப்பு இன்றி அமையாதது என்பதால், அவர் இல்லாதது தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாகவே இருக்கும். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார். அதில் 174 இன்னிங்சில் கிட்டத்தட்ட 4000 ரன்களை அடித்திருக்கிறார். இது மும்பை அணிக்காக அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்சம் ஆகும்.

- Advertisement -

இப்படிப்பட்ட வீரர் இல்லாதபோது, அந்த இடத்தை நிரப்ப யார் சரியாக இருப்பார்? என்று பல சந்தேகங்களும் நிலவி வருகின்றன. இதற்கு இந்திய வீரர் ஹனுமா விகாரி தனது சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியதாவது: “மும்பை அணிக்கு இது மிகப் பெரிய இழப்புதான். அவரைப் போன்ற வீரரின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக டி20 போட்டிகளில் அப்படி ஒரு லெஜெண்டின் இடத்தை நிரப்பவே முடியாது.

ஆனால் அவர் கொடுத்த அதே பங்களிப்பை வேறு யாரு கொடுப்பார் என்று யோசிக்கும் பொழுது, தற்போது மும்பை அணியில் இருக்கும் ஒரே வீரர் டிம் டேவிட். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அவர் நன்றாக செயல்பட கூடியவர். சரியான பயிற்சியை அவருக்கு கொடுத்தால் நிச்சயம் அடுத்த சில ஆண்டுகள் மிடில் ஆர்டரில் பொல்லார்ட் கொடுத்த அதே அதிரடியான பங்களிப்பை இவரும் கொடுப்பார்.” என்றார்.