“யாரு நான் சரியா விளையாடலையா? இத பாருங்க” – ஆதாரங்களை அள்ளி வீசிய ரோஹித் சர்மா!

0
762
Rohit

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியது. அந்தத் தொடர் முடிந்து டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி நகர்ந்தார். இதற்கு அடுத்து அதே ஆண்டின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இழந்ததும், அந்த வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஒட்டுமொத்தமாக வெளியே வந்தார்.

இதற்கு அடுத்து இந்திய அணிக்கு புதிய கேப்டனாக மூன்று வடிவத்திற்கும் ரோஹித் சர்மா கொண்டுவரப்பட்டார். அதே நேரத்தில் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்து ரவி சாஸ்திரி வெளியேற, புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய லெஜெண்ட் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை ஆக்ரோஷமாக தைரியமாக இல்லாததே தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது. புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர் இருவரும் இந்த பேட்டிங் அணுகு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த தைரியமாக விளையாட வேண்டும் என்று மொத்த அணிக்கும் தனித்திட்டங்கள் கொண்டு வந்தார்கள். இதற்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மாவின் பெரிய இன்னிங்ஸ்கள் குறைந்தது. ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்து ஆவரேஜ் கொஞ்சம் சரிந்தது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” நான் பேட்டிங்கில் ரிஸ்க் எடுக்க விரும்பினேன். அதனால்தான் இப்பொழுது சற்று எனது எண்கள் வித்தியாசமாக இருக்கிறது. எனது ஒருநாள் கிரிக்கெட் ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்து இருக்கிறது. அதேவேளையில் ஆவரேஜ் குறைந்திருக்கிறது. எங்களுடைய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ‘இத்தனை ஆண்டுகள் நீங்கள் வேறு மாதிரி பேட்டிங் செய்து வந்த காரணத்தால், நீங்கள் பெரிய ரன்கள் கொண்டு வந்தீர்கள். சில காலமாக ரிஸ்க் எடுப்பதால் பெரிய ரன்கள் வரவில்லை’ என்று கூறினார்.

என்னுடைய கேரியர் ஸ்ட்ரைக் ரேட் 90. கடந்த இரண்டு ஆண்டுகளில் 105 முதல் 110 ஆக அது மாறி இருக்கிறது. எனவே எங்காவது நாம் சமரசம் செய்ய வேண்டியதாக இருந்தது. 55 ரன் ஆவரேஜில் 110 ஸ்டிரைக் ரேட் ஒரு நாள் கிரிக்கெட்டில் வைத்திருப்பது கடினம்.

- Advertisement -

இந்தியாவில் சமீபத்திய எனது டெஸ்ட் இன்னிங்ஸ்களை பாருங்கள். வெளிநாடுகளில் பேட்டிங் செய்வதை விட கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் பேட்டிங் செய்வது சவாலான ஒன்றாக இருக்கிறது. இப்படி இருக்க நாம் ஏன் பேட்டிங் யூனிட்டின் ரன் மற்றும் சராசரி பற்றி பேசவே இல்லை?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக ரோஹித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகரித்திருக்கிறது. அதேவேளையில் அவரது ஆவரேஜும் மோசமாக கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அவர்தான் டாப் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். சமீபத்தில் 2021 இந்தியாவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் சதம் அடித்து அசத்தியிருந்தார்.