“எது பெரிய அணியா? உலக கோப்பைல எல்லாருமே ஒன்னுதான்!” – விராட் கோலி இந்திய அணிக்கு வார்னிங்!

0
1794
Virat

இன்று இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து புனே மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்த இரண்டு அணிகளும் கடைசியாக நான்கு முறை மோதிக் கொண்டதில் பங்களாதேஷ் அணி மூன்று முறை வென்று இருக்கிறது என்பது, அதிர்ச்சியான ஒரு புள்ளிவிபரமாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியை 2007 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணி வீழ்த்தி இருக்கிறது. மேலும் இந்திய அணியின் கடைசி பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றியது.

மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணியை பங்களாதேஷ் அணி மிக நெருக்கமான போட்டியில் வீழ்த்தியது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணியை இந்திய அணி எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி கூறும் பொழுது “உலகக் கோப்பையில் பெரிய அணிகள் என்று எதுவும் கிடையாது. பெரிய அணிகள் என்று கவனம் செலுத்தப்படும் போதெல்லாம் ஒரு பெரிய அப்செட் நடக்கிறது.

- Advertisement -

நான் பல ஆண்டுகளாக ஷாகிப்க்கு எதிராக விளையாடி வருகிறேன். அவர் தன்னுடைய பந்துவீச்சில் அற்புதமான கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார். அவர் புதிய பந்தில் சிறப்பாக வீசுவார். பேஸ்மேனை எப்படி ஏமாற்றுவது என்று அவருக்கு நன்றாக தெரியும்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் விராட் கோலி பற்றி ஷாகிப் அல் ஹசன் கூறும்பொழுது ” விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நவீன காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆன அவரை ஐந்து முறை வீழ்த்தி இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக அவரது விக்கெட்டை வீழ்த்துவது எனக்கு பெரிய மகிழ்ச்சியை தரும்!” என்று கூறியிருக்கிறார்!

இது மட்டும் இல்லாமல் ஷாகிப் பற்றி ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “அவர் ஒரு ஸ்மார்ட்டான கிரிக்கெட்டர். அவர் நீண்ட காலமாக பங்களாதேஷ் அணியை தனது தோள்களில் சுமந்து வருகிறார்!” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.