நியூசிலாந்து சீரிஸில் சஞ்சு சாம்சனை எடுத்து பெரிய தப்பு பண்ணீட்டிங்க; ஏன்னா..? – முன்னாள் வீரர் பேட்டி!

0
972

சஞ்சு சாம்சனை டீமில் எடுத்து எங்கே விளையாட வைக்க போகிறீர்கள்? என்று கடுமையாக சாதி உள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

டி20 உலக கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முன்னணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நவம்பர் 18ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நடக்கவிருந்தது. மழை பெய்து வருவதால், ஆட்டம் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பையில் இடம்பெறாத சஞ்சு சாம்சன் நியூசிலாந்து தொடருக்கு எடுக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் தன்னை நிரூபித்து காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதை பயன்படுத்திக் கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

ஆனால், நியூசிலாந்து தொடருக்கு சஞ்சு சாம்சனை எடுத்துருக்கவே கூடாது. அவரை எடுத்து தவறு செய்து விட்டீர்கள் என்று கடுமையாக சாடி இருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

சஞ்சு சாம்சனை பிளையிங் லெவனில் எந்த இடத்தில் விளையாட வைப்பீர்கள்? மூன்றாவது இடத்தில் ஷ்ரேயாஸ் விளையாடுவார். நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவ், ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார்கள்.

ஏழாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாட வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து களம் இறங்குவார்கள். இதில் சஞ்சு சாம்சனுக்கு எங்கே இடம் கிடைக்கும்?.

கீப்பிங் செய்ய இஷான் கிஷன் மற்றும் பண்ட் இருவரும் இருக்கின்றனர். இந்த இடத்திலும் அவரை விளையாட வைக்க முடியாது.

சஞ்சு சம்சன் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்து வருகிறார். அனுபவம் மிக்க வீரராக உள்ளூர் போட்டிகளில் இருக்கிறார். அவரை அழைத்து வந்து வெளியில் அமர்துவது சரியாக இருக்காது.

இளம் வீரர்களை நம்பி களமிறங்கினால் அவர்களை மட்டும் அணியில் வைத்துக்கொள்ள வேண்டும். எதற்காக இப்படி சாம்சனை அழைத்து வந்து எந்த இடத்தில் விளையாட வைப்பது என தெரியாமல் வெளியில அமர்த்த வேண்டும்?. இந்த தவறை செய்துவிட்டீர்கள்.” என்று கூறினார்.