50 பந்துல அடிக்க முடியறப்ப நான் ஏன் 100 பந்து எடுக்கணும்? – சூரியகுமார் மாஸ் பேட்டி!

0
2754
surya kumar yadav

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை அடுத்து இலங்கை அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்டு தொடரில் இலங்கை அணி ஆட உள்ளது . இந்தத் தொடருக்கான அணி ஆனது நாளை அறிவிக்கப்பட உள்ளது .

பிசிசிஐயின் புதிய தலைமையின்படி நடைபெறுகின்ற எல்லா போட்டிகளிலும் வலுவான அணியை கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி தனது வலுவான டி20 அணியுடன் களம் இறங்கும் . இந்திய அணிக்கான டி20 தலைமையில் மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது . இந்திய அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா டி20 அணிக்கு நியமிக்கப்படுவார் .

- Advertisement -

இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மும்பை அணிக்காக ரஞ்சி டிராபியில் ஆடிவரும் சூரியகுமார் யாதவ் டெஸ்ட் போட்டி தான் தனது அடுத்த இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார் . இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான் எப்போது அணிக்காக விளையாட களமிறங்கினாலும் போட்டியின் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருக்க வேண்டும் . அணிக்கு தேவை படும் ரன்களை என்னால் 50 பந்துகளில் எடுக்க முடியும் என்றால் அதற்காக ஏன் நான் நூறு பந்துகளை எடுத்து ஆட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

அணிக்காக எப்போது இறங்கினாலும் என்னால் முடிந்த சிறப்பான ஒரு பங்களிப்பை அளிப்பதே என்னுடைய இலக்கு என்று குறிப்பிட்டவர் , இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்று இலக்கு நிர்ணயத்துள்ளதாக தெரிவித்தார் . என்னுடைய ஆட்டமானது தாக்குதல் பாணி ஆட்டம் என்றாலும் என்னால் சிகப்பு பந்து கிரிக்கெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறினார்

என்னுடைய இளம் வயது முதலே அதிகமான சிகப்பு பந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன் அதனால் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது எனக்கு கடினமான ஒரு இலக்கு அல்ல இந்திய அணிக்காக ஆடுவது என்ற கனவு ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் நிறைவேறி விட்டது ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கான கனவு இன்னும் நிறைவேறவில்லை அதனை விரைவில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் டி20 போட்டிகளில் நம்பர் ஒன் ரேங்கில் இருந்தது பற்றி கேட்டதற்கு அது ஒரு கனவு போன்று இன்னும் இருக்கிறது என்னால் நம்ப முடியவில்லை என்று கூறினார் . தற்போது நடைபெற்று வரும் ரஞ்சிப் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 80 பந்துகளில் 90 ரண்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ரோகித் சர்மா பற்றி பேசிய சூரியகுமார் யாதவ் ரோகித் எனக்கு அண்ணன் போன்றவர் என்னுடைய ஆரம்பம் காலம் முதலே அவர் என்னை வழிநடத்தி இருக்கிறார் . ரஞ்சிக் கோப்பை காக மும்பை அணியிலும் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் அவருடன் விளையாடி இருக்கிறேன் மேலும் தற்போது இந்திய அணியில் அவருடன் இணைந்து விளையாடுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்னுடைய ஆரம்பம் காலம் முதலே என்னை அவர் வழிநடத்துகிறார் . ஒரு மூத்த சகோதரர் போல் இருந்து அறிவுரை வழங்குவார் என்று கூறினார்.

தொடர்ந்து விராட் கோலி பற்றி பேசிய சூரியகுமார் யாதவ் விராட் பாயுடன் சமீப காலங்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி உள்ளேன் அவருடன் இணைந்து விளையாடுவது எப்போதும் ஒரு மகிழ்ச்சி ஆன தருணம் களத்தில் இருக்கும் நேரங்களில் நம்மை ஊக்குவித்துக் கொண்டே இருப்பார் . அவரைப் போன்ற ஒரு உலக தரமான பேட்ஸ்மனுடன் களத்தில் இருப்பது நிறைய அனுபவங்களை கற்றுக் கொள்ள உதவும் என்று கூறினார்.