இந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுது பங்களாதேஷில் என்னை டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு பேசுவார்கள் – முஷ்பிக்குர் ரஹிம் பெருமிதம்

0
123

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 393 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 199 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 465 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 133 ரன்கள் ரஹீம் 105 ரன்களும் குவித்தனர்.

அதுமட்டுமின்றி பங்களாதேஷ் அணி வீரர்கள் மத்தியில் டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தற்போது முஷ்பிக்குர் ரஹிம் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

பங்களாதேஷில் என்னை டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டுவார்கள் – முஷ்பிக்குர் ரஹிம்

நான் எப்பொழுதெல்லாம் சதம் அடிக்கின்றேனோ அப்பொழுதெல்லாம் பங்களாதேஷில் இருக்கும் மக்கள் என்னை டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டுவார்கள். ஆனால் நான் நிறைய முறை ரன் குவிக்க முடியாத கட்டத்தை அனுபவித்திருக்கிறேன். ரன் குவித்து முடியாத பொழுதெல்லாம் எனக்கு நானே குழிதோண்டி கொள்வது போல் இருக்கும்.

சீனியர் வீரர் என்ற அடிப்படையில் நீண்ட காலம் என்னால் விளையாட முடியாது. இளம் வீரர்களுக்கு தற்போது போட்டி மற்றும் வருங்காலம் குறித்த ஆதரவு தேவை. இந்த விஷயங்கள் எல்லாம் சமாளிக்க நான் வெளியே அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தால் விளையாட்டில் எங்களுடைய கடமைகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் எவ்வளவு சதமடிக்க வீரர்களோ அதை பொருத்துதான் நீங்கள் எந்த அளவுக்கு நல்ல பேட்ஸ்மேன் என்பது முடிவாகும். நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டியில் சதம் அடித்தது எனக்கு மகிழ்ச்சி. முடிந்தவரை என்னுடைய அணிக்காகவும் எனக்காகவும் நிறைய சாதனைகளை படைக்க வேண்டும் என்கிற நோக்கம் எனக்குள் எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ளார். வெற்றிக்கு எப்பொழுதும் எல்லை இல்லை, என்னுடைய சாதனைகளை எண்ணி நான் பெருமைப் பட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமீம் இக்பால் என்னை வெகுவாக பாராட்டினார்

தமீம் இக்பால் என்னுடைய நெருங்கிய நண்பர். இந்த பெரிய மைல் கல்லை என்னால் எட்ட முடியவில்லை ஆனால் நீ எட்டி விட்டாய்என்று கூறி எனக்கு வாழ்த்து தெரிவித்தார். சாதனைகள் படைப்பது முறியடிக்க தான். என்னுடைய அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை அவர் முறியடித்தது எனக்கு சந்தோஷம்தான். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் நீ மறுபடியும் என்னுடைய சாதனையை முடிவெடுத்து விடுவாய் என்று எனக்கு நம்பிக்கை தெரிவித்தார். இது ஆரோக்கியமான போட்டி எங்களுக்குள் நாங்கள் இப்படி ஒருவருக்கொருவர் உதவி கொள்வோம் என்றும் கூறியுள்ளார்