ரிசல்ட் வந்ததுக்கு பிறகு எது சரி எது தப்புன்னு யார் வேணும்னாலும் சொல்லலாம் ! -தினேஷ் கார்த்திக் கடுமையான பதில்

0
766

கடந்த 2022 ஆம் வருடமானது இந்திய கிரிக்கெட்டை பொருத்தமட்டில் ஒரு சோகமான வருடமாகவே இருந்திருக்கிறது . தென்ஆப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் தொடங்கிய தோல்வி பங்களாதேஷ் அணியுடன் ஆன டெஸ்ட் தொடர் வெற்றியோடு முடிவடைந்து இருக்கிறது இந்த ஆண்டு .

பொதுவாகவேஏற்றத்தாழ்வுகளுடனே இந்திய அணி கடந்த ஆண்டில் பயணித்திருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் வெற்றியை பெற்றாலும் கடந்த வருடத்தில் நடந்த மிக முக்கியமான டி20 உலக கோப்பையில் அரை இறுதியில் தோற்று வெளியேறியது இந்திய அணி.

இங்கிலாந்து அணி உடன் அரை இறுதியில் பெற்ற மோசமான தோல்வி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது . முக்கியமாக யுசேந்திர சஹால் அணியில் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை கிளப்பியது . தற்போது இது குறித்து பேட்டி அளித்திருக்கிறார் உலக கோப்பை டி20 இந்திய அணியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக் .

இதுகுறித்து கிரிக்பஸ் இணையதள உரையாடலில் பேசியுள்ள அவர்” அணியின் காம்பினேஷனை பொறுத்தவரை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அணிக்கு எது சரியாக இருக்கும் என்று கலந்து ஆலோசித்து வீரர்களை தேர்வு செய்கின்றனர் . சில நேரங்களில் அவர்கள் ஒரு வீரரின் மீது இருக்கும் நம்பிக்கையில் அந்த வீரரை தொடர்ந்து தேர்வு செய்கின்றனர் . இந்த உலகக் கோப்பையை எடுத்துக் கொண்டால் கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது அதிகமாக நம்பிக்கை வைத்திருந்தனர் . அவரும் தொடரின் ஆரம்ப கட்டங்களில் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் முடிவு சரியாக அமையவில்லை” என்று கூறினார். உலகக் கோப்பை டி20 தொடரில் ஐந்து ஆட்டங்களில் ஆடிய அஸ்வின் 21 ரன்களையும் ஆறு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தொடர்ந்து பேசிய அவர் யுசேந்திர சஹால் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் இருந்தால் ஒருவேளை அவர் போட்டியில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் . பொதுவாக ஒரு விஷயம் நடந்து முடிந்த பின் அதில் எது சரி? எது தவறு? என்று கூறுவது எளிது”என்று தெரிவித்தார். மேலும் இனிவரும் போட்டிகளில் சஹாலுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று நம்புவதாக தெரிவித்தார் .

இந்திய மற்றும் இலங்கை அணி களுக்கு இடையேயான டி20 தொடரானது வருகின்ற மூன்றாம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் யுசேந்திர சஹால் இடம் பெற்றுள்ளார் . இந்தப் போட்டி தொடர்களில் அவர் தான் இந்தியாவின் பிரதான ஸ்பின்னராக களம் இறக்கப்படுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.