ஸ்ரேயாஸ் ஐயர் என்னுடைய கேட்சை தவறவிட்டதும் நான் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் ; காரணம் இதுதான் – வேன் டெர் டஸ்சென்

0
138

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடந்து முடிந்து முதல் டி20 போட்டியில் தென்ஆப்ரிக்க அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 211 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 31* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தது. அதன்பின்னர் டேவிட் மில்லர் மற்றும் வேன் டெர் டஸ்சென் ஜோடி அதிரடியாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 63 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்து தென்னாபிரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64* ரன்களுடனும், வேன் டெர் டஸ்சென் 46 பந்துகளில் 75* ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

போட்டியை நழுவவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்

ஆட்டத்தின் 16வது ஓவரின் 2-வது பந்தில் வேன் டெர் டஸ்சென் அடித்த பந்தை ஸ்ரேயாஸ் கேட்ச் பிடிக்காமல் தவற விட்டார். அப்பொழுது அவர் 30 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து நிலையில் இருந்தார். அவர் தவற விட்ட அந்த கேட்ச் இந்திய அணியை பதம் பார்த்தது.

- Advertisement -

அதன் பின்னர் 16 பந்துகளில் அவர் 46 ரன்கள் குவித்து தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்திய அணியின் தோல்வி அந்த நொடியிலேயே உறுதியானது பின்னர் தான் தெரியவந்தது.

இந்திய அணிக்கு பரிசு கொடுக்க நினைத்தேன்

29 ரன்கள் எடுத்த நிலையில் நான் அடித்த பந்தை ஸ்ரேயாஸ் தவறவிட்டார். இது அவர்களுக்கு மிகப்பெரிய விளைவாக அமையப் போகிறது என்று நான் எண்ணினேன். ஏனென்றால் நான் அப்பொழுது அதிக பந்துகளை பிடித்து நன்கு செட்டிலாகி இருந்தேன்.

இதற்கான பதில் பரிசை நான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் அதாவது இனி எல்லா பந்தையும் தூக்கி விளாச வேண்டும் என்று முடிவு செய்தேன்”, என்று வேன் டெர் டஸ்சென் போட்டி முடிந்ததும் கூறியுள்ளார்.