கேஎல் ராகுல் மென்டல் ஹெல்த்ல இப்படியொரு பிரச்சினை இருக்கு; கண்டுக்காம ஆடவச்சுட்டீங்க – இர்பான் பதான் கருத்து!

0
1994

கேஎல் ராகுலுக்கு மனதளவில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார் இர்ஃபான் பத்தான்.

டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதி சுற்றுடன் இந்திய அணி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. இதற்கு முழு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரின் மோசமான துவக்கம் ஆகும். மேலும் மோசமான பீல்டிங் மற்றொரு குறைபாடாக இருக்கிறது.

கேஎல் ராகுல் முதல் மூன்று போட்டிகள் முறையே 4, 9, 9 ரன்கள் அடித்தார். ஆனாலும் இவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் நான்காவது போட்டியில் விளையாட வைத்தது. அதில் 30 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்ததாக நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்தார்.

இதே ஃபார்மை அரையறுதி போட்டியிலும் தொடர்வார் என எதிர்பார்த்தபோது, துரதிஷ்டவசமாக 5 பந்துகளில் 5 ரன்கள் அடித்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்தார். முக்கியமான போட்டிகளில் இப்படி தொடர்ச்சியான சொதப்பல்களை வெளிப்படுத்தியதால் தற்போது இந்திய அணியின் தோல்விக்கான காரணம் இவர் என்று திரும்பி இருக்கிறது.

உண்மையில் கேஎல் ராகுலுக்கு என்ன பிரச்சனை? என்பதை பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் இர்பான் பதான்.

“கேஎல் ராகுலுக்கு தொடர்ச்சியாக இப்படி ஒரு பிரச்சனை இருந்து வருகிறது. காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு கால்களை முன்னே வைத்து ஆடுவதற்கு தயங்கி வருகிறார். உலககோப்பையில் பேட்டிங் செய்யும் விதத்தில் சற்று சுனக்கம் தெரிகிறது.

இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்தபோது, அடுத்த போட்டியிலும் அதை தொடர்வார் என்று நான் நினைத்தேன். ஆனால் அதற்கு தலைகீழாக சொற்பரன்களில் ஆட்டம் இழந்தார்.

மேலும் மனதளவிலும் சற்று பின்தங்கி இருப்பதாக தெரிகிறது. உலக கோப்பையில் அவரது பேட்டிங்கில் தொடர்ச்சியாக தயக்கம் தெரிந்ததால் தெளிவான ஷாட்கள் விளையாட முடியவில்லை. இதன் காரணமாக விக்கெட்டை இழந்து வெளியேறி இருக்கிறார்.

அணி நிர்வாகமும் அவருக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து எடுத்துரைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. கண்மூடித்தனமாக நம்பி விட்டதோ என்ற எண்ணங்களும் தற்போது தோன்றுகின்றன.” என்றார்.