“கமென்டரியோட என் கிரிக்கெட் வாழ்க்கை முடிஞ்சிதுன்னு நான் நெனச்சப்போ. எனக்கு ஒளியாக நின்ன..” – ரோகித் சர்மாவுக்கு நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக்!

0
4296

தனது உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ரிக்கி பாண்டிங், ரோகித் சர்மா ஆகியோருக்கு உலக கோப்பைக்கு முன்பாக நன்றி தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறார். 2019/20ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஓய்வு அறிவித்து விட்டார் என்று பலரும் எண்ணினர்.

- Advertisement -

ஏனெனில தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்த வீரர்களே கமெண்டரியில் ஈடுபடுவர். அப்படி கமெண்ட் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்கும், கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் பினிஷிங் ரோலில் அபாரமாக விளையாடினார்.

இதனால் மீண்டும் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்தி தற்போது டி20 உலக கோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்.

இவரது விடாமுயற்சியை பாராட்டி ஐசிசி, ரிக்கி பாண்டிங் மூலம் வீடியோ வெளியிட்டு இருந்தது. அதில், “கமெண்டரியில் இருந்து விட்டு மிகச் சிறப்பான கம்பேக் கொடுத்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவது அவ்வளவு எளிதல்ல. தினேஷ் கார்த்திக் உடன் நான் பணியாற்றி இருக்கிறேன். அவரது விடாம முயற்சி தான் இதற்கு முழு முக்கிய காரணம். பெரும்பாலான இந்திய வீரர்களுடன் நான் பயணித்தபோது, கிட்டத்தட்ட அனைவரும் விடாமுயற்சி மற்றும் முடியவில்லை என்று விட்டுவிடும் குணம் இல்லாதவர்கள். ஆகையால் அவர்கள் எந்த வயதிலும் உச்சத்தை தொடுகின்றனர். 37 வயதில் தினேஷ் கார்த்திக் இப்படி செயல்பட்டு வருவது அபாரமானது.” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பதில் கொடுத்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். அவர் கூறுகையில், “நான் பார்த்து வளர்ந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்னை எப்படி பாராட்டி இருப்பது நெகழ்ச்சியாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் உங்களுடன் பயணித்ததில் மறக்க முடியாத அனுபவம் கிடைத்திருக்கிறது.

கொல்கத்தாவில் நான் இருந்தபோது அபிஷேக் நாயர் என்னை விடாப்பிடியாக உந்திக் கொண்டே இருப்பார். அவரது ஊந்துதல் இல்லாமல் இது சாத்தியம் அடைந்திருக்காது.

மேலும் இந்த தருணத்தில் ரோகித் சர்மா அவருக்கு நன்றி கூட கடமைப்பட்டிருக்கிறேன். கிரிக்கெட் வீரராக நான் பலவற்றை கடந்து வந்திருக்கிறேன். என்னிடம் எப்போதும் அனுசரணையாகவும் நான் கஷ்டப்படும் சூழலில் எனக்கு பக்கபலமாகவும் இருந்திருக்கிறார். குகைக்குள்ளே அடைந்திருந்த எனக்கு, இங்கு தான் வெளிச்சம் இருக்கிறது என்று காட்டிய ஒருவருக்கு நான் இந்த தருணத்தில் எனது பண்பை வெளிக்காட்ட வேண்டும். அந்த ஒருவர் தான் ரோகித் சர்மா. அவர் இல்லாமல் இது சாத்தியமடைந்திருக்காது.” பதிவிட்டிருந்தார்.