போட்டியின்போது அனுப்பப்பட்ட சிக்னல் என்ன? – இலங்கை பயிற்சியாளர் விளக்கம்!

0
154
Sl vs Ban

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டியை விட மிகவும் உச்சக்கட்ட நெருப்பு மாதிரியான பரபரப்பான போட்டியாக இலங்கை பங்களாதேஷ் மோதிய போட்டி அமைந்திருந்தது. இந்தப்போட்டியில் நான்கு பந்துகள் மீதம் இருக்கும் பொழுது 2 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் இந்திய அணிகளுக்கு அடுத்து மூன்றாவது அணியாக அடுத்த சுற்றுக்கு இலங்கை அணி நுழைந்திருக்கிறது.

சமீப காலங்களில் இலங்கை பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டிகள் இருநாட்டு ரசிகர்களாலும் பெரிய அளவில் பரபரப்பாக முன்னெடுக்கப்படுகிறது. தற்போதைய கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து, இந்தியா பாகிஸ்தான் இப்படியான வகையில் இலங்கை பங்களாதேஷ் இன்று உருவாகியிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்களின் செய்கைகளைக் கூறலாம்.

- Advertisement -

நேற்று இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே களத்திற்கு வெளியேவே இந்தப் போட்டி ஒரு பிளாக்பஸ்டர் போட்டியாக அமைவதற்கான திரிகள் இரு அணிகளும் கொளுத்தப்பட்டன. அவை சமூக வலைதளங்களில் இருநாட்டு ரசிகர்களாலும் முன்னெடுக்கப்பட்டு பெரிய அளவில் வைரல் ஆகின.

போட்டி தொடங்குவதற்கு முன்பு இலங்கை அணியின் கேப்டன் டசன் சனகா ” ஆப்கானிஸ்தான் அணியை வைத்து பார்க்கும் பொழுது பங்களாதேஷ் அணி சிறிய அணிதான். பங்களாதேஷ் அணியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிஜூர் ரகுமான் இருவர் மட்டுமே உலகத்தரமான பந்துவீச்சாளர்கள். அதனால் அவர்களை சமாளிப்பது எங்களுக்கு சிரமமாக இருக்காது” என்று கூறியிருந்தார்

இதற்கு பதிலடி தரும் விதமாக பங்களாதேஷ் அணியின் ஒரு பயிற்சியாளரான காலித் மஹ்மூத் ” எங்கள் அணியில் ஆவது 2 உலகத்தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் இலங்கை அணியில் அப்படி ஒருவர் கூட கிடையாது” என்று கூறி பரபரப்பை மேலும் கிளப்பினார்.

- Advertisement -

இதையடுத்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் லெஜன்ட் பேட்ஸ்மேனான மஹேல ஜெயவர்தன ” இது உலகத்தரமான போட்டியை அவர்களுக்கு காட்டும் நேரம்” என்று ட்வீட் செய்து மேலும் சூழ்நிலையை நெருப்பாக்கினார்.

இந்த நிலையில் நேற்று பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்யும் பொழுது, இலங்கை அணி பந்து வீச்சில் இருந்தபொழுது, இலங்கை அணியின் கேப்டனுக்கு சில செய்திகளை வழங்க குறியீடாக பெவிலியனிலிருந்து எழுத்து மற்றும் எண்கள் மூலம் பயிற்சியாளர் சில்வர் உட் குறிப்புகளை வழங்கினார். இவர் இங்கிலாந்திற்கு பயிற்சியாளராக இருந்த பொழுது இதைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இது குறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் சில்வர் உட் இடம் கேட்கப்பட்ட பொழுது, அதற்கு அவர் ” இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் இல்லை. அந்த நேரத்தில் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு எந்த பந்து வீச்சாளர் பந்து வீசினால் சரியாக இருக்கும் என்று ஒரு குறியீட்டின் மூலம் காட்டுவது தான். இது கட்டளை கிடையாது வெறும் கேப்டனுக்கு பரிந்துரை மட்டும்தான். இந்த நேரத்தில் சிக்னல்கள் எளிமையானது ” என்று தெரிவித்தார்!

மேலும் பயிற்சியாளர் இப்படி அனுப்பும் குறியீடுகளை கேப்டன் தேவைப்பட்டால் பின்பற்றலாம் இல்லை என்றால் அப்படியே விட்டு விடலாம். முழுக்க முழுக்க கேப்டனின் விருப்பத்தை பொருத்தது. இதில் பயிற்சியாளரின் எந்த தலையீடும் இருக்காது. இது கேப்டனை கட்டுப்படுத்தும் திட்டம் கிடையாது என்று கூறப்படுகிறது!