நாளை இந்தியா பாகிஸ்தான் போட்டி ஆடுகளம் எப்படி இருக்கும்? மழை வாய்ப்பு எவ்வளவு? போட்டி நடக்குமா? – ஆடுகள தயாரிப்பாளர் மற்றும் வானிலை அறிவிப்பாளர் அறிக்கை!

0
1643
Ind vs Pak

நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு ஒரு லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வர இருக்கிறார்கள். இப்படியான ஒரு போட்டியில் மழை அச்சுறுத்தல் மிக பயங்கரமாக இருக்கிறது என்பது எந்த கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பாத ஒன்று!

இந்தப் போட்டி குறித்து இரு நாட்டு ரசிகர்கள் மற்றும் இருநாட்டு முன்னாள் வீரர்கள் என்பதோடு நில்லாமல், இந்த போட்டி குறித்து உலகளாவிய எதிர்பார்ப்பு எல்லா நாட்டு ரசிகர்களும் எல்லா நாட்டு முன்னாள் வீரர்களுக்கும் இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தப் போட்டியில் விளையாட இந்தியா பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ” ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் இந்த போட்டிக்காக நான் காத்திருக்கிறேன் ” என்று தன் எதிர்பார்ப்பை கூறியிருந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் மெல்போர்ன் மைதான பகுதியில் வானிலை அறிக்கையில் அந்தப் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய 90% வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

தற்பொழுது இந்த மழை வாய்ப்பு 70 சதவீதமாக குறைந்திருக்கிறது. நாளைய நாளில் வானிலை அறிவிப்பை வெளியிட்டவர் கூறுகையில் “மேகமூட்டமாக இருக்கும். மழை பெய்ய 70 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் நாளை மதியத்திற்கு மேல் மாலையில் இடியுடன் கூடிய கனமழை வடகிழக்கு புறநகர்ப் பகுதிகளில் பெய்யும். மேலும் தென்கிழக்கு திசையிலிருந்து மாலையில் 25 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மழை வாய்ப்பு கொஞ்சம் குறைந்ததும் ரசிகர்களின் பார்வை நாளைய ஆடுகளத்தின் பக்கம் திரும்பியது. மெல்போன் ஆடுகள தயாரிப்பாளர் சால்வடோர் கூறுகையில் ” டி20 போட்டிகளுக்கு ஆடுகளம் இரண்டு பகுதிகளிலும் ஒரே சீரானதாக இருக்க வேண்டும். இந்த ஆடுகளமும் அப்படியே மூன்று வாரங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. மைதானத்திற்கு 200 மீட்டருக்கு வெளியே எங்கள் நர்சரியில் இந்த ஆடுகளம் தயாரிக்கப்பட்டது. மைதானத்திற்கு அருகில் ஆடுகள தயாரிப்பை மேற்கொள்வதால் எங்களால் உடனுக்குடன் தேவையானதை பார்வையிட்டு சரி செய்து கொள்ள முடிகிறது. இந்த ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்குமே சரி சமமான வாய்ப்புகளோடு இருக்கும் ” என்று கூறியுள்ளார்!