கோலியால் முடியாத விஷயம்.. ஹசிம் ஆம்லா பாபர் அசாம் உலக சாதனையை உடைத்த சுப்மன் கில்.. புதிய வரலாறு!

0
1107
Gill

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது.

இரண்டு அணிகளுமே நடப்பு உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வந்திருக்கின்றன. எனவே இன்றைய போட்டியில் முதல் தோல்வியை பெறப்போவது யார்? என்கின்ற சுவாரசியமான விஷயம் அடங்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டேரில் மிட்சல் 130 ரன்கள் குவிக்க, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இந்திய அணி இந்த போட்டியில் 75 ரன்கள் எடுத்த ரச்சின் ரவீந்திரா மற்றும் சதம் அடித்த டேரில் மிச்சல் ஆகியோருக்கு எளிய கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது. இல்லையென்றால் நியூசிலாந்து அணி 250 ரன்கள் எடுத்திருப்பது மிகப்பெரிய கடினமான விஷயமாக மாறி இருக்கும்.

இந்த நிலையில் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்னொரு முனையில் சுப்மன் கில் தன்னுடைய வழக்கமான நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று சுப்மன் கில் 20 ரன்கள் எடுத்திருந்த பொழுது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டின் அடையாளமாக இருக்கும் விராட் கோலி கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி 2000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் 53 இன்னிங்ஸ்களில் கடந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர்கள் :

சுப்மன் கில் 38 இன்னிங்ஸ்
ஹசிம் ஆம்லா 40 இன்னிங்ஸ்
ஜாகிர் அப்பாஸ் 45 இன்னிங்ஸ்
கெவின் பீட்டர்சன் 45 இன்னிங்ஸ்
பாபர் அசாம் 45 இன்னிங்ஸ்