அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் மழை வந்தால்? புதிய விதி என்ன சொல்கிறது?

0
47475
T20wc22

எட்டாவது டி20 உலகக்கோப்பையில் 16 அணிகள் கலந்து கொள்ள, எட்டு அணிகள் அதில் நேரடியாக சூப்பர்12 சுற்றுக்குத் தகுதி பெற்றன. மீதி எட்டு அணிகளை கொண்டு சூப்பர் 12 சுற்று தேவைப்படும் நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன!

சூப்பர் 12 சுற்றில் இருந்து இரண்டு குழுவாக பிரிக்கப்பட்ட அணிகளில், இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த நான்கு அணிகள் தற்போது அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன!

- Advertisement -

முதல் குழுவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், இரண்டாவது குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதியை எட்டி உள்ளன. தனது குழுவில் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து அடுத்த குழுவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணி உடனும், தனது குழுவில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அடுத்த குழுவில் முதலிடம் பிடித்த இந்திய அணிவுடனும் அரை இறுதியில் பலப் பரீட்சை நடத்துகின்றன!

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் பொழுது அதற்கு ஐசிசி பழைய மற்றும் புதிய விதிகளை அறிவித்து இருக்கிறது. அந்த விதிகள் என்னென்ன சொல்கிறது என்று பார்ப்போம்!

அரையிறுதி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், அடுத்த நாள் போட்டி நடத்தப்படும். அடுத்த நாளும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு நடத்த முடியாமல் போனால், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் எடுத்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். உதாரணமாக இந்தியா நியூசிலாந்து. அதேபோல் அரை இறுதிப் போட்டியில் மழை குறுக்கீடு இருக்கும்பொழுது முடிவை தெரிந்து கொள்ள, இரண்டு அணிகளும் 10 ஓவர்களாவது விளையாடி இருக்க வேண்டும். முன்பு ஐந்து ஓவர்கள் என்ற விதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கடுத்து இறுதிப் போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்தால் அரையிறுதி போட்டியில் எந்த மாதிரியான விதிகள் பின்பற்றப்பட்டனவோ அதே விதிகள் இங்கும் பொருந்தும். ஆனால் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு தள்ளி வைக்கப்படும் அடுத்த நாளிலும் மழை வந்து போட்டி நடத்தவே முடியாமல் போனால், கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்!

அரையிறுதி சுற்றில் இரண்டு அரை இறுதி போட்டிகளிலும் இரண்டு நாட்களிலும் மழை வந்து போட்டி நடத்த முடியாமல் போனால், இந்தியா நியூசிலாந்து அணிகள் தானாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதேபோல் இறுதி போட்டியிலும் தொடர்ந்து இரண்டும் நாளும் மழை வந்தால், கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்!