எது மாறினாலும் இது மட்டும் மாறவில்லை; – வீடியோ இணைப்பு!

0
258
Asiacup2022

15ஆவது ஆசிய கோப்பையில் இறுதிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மைதானத்தில் இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தத் தொடர் முழுவதும் முக்கியமான போட்டிகளில் எல்லாமே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த அணிகள் மட்டுமே வென்று வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. கடந்த ஆட்டங்களில் விளையாடிய அதே அணியை இந்த ஆட்டத்திலும் இரு அணிகளும் களத்தில் இறக்கி இருக்கின்றன.

இலங்கை அணியின் பேட்டிங்கை துவங்க வந்த துவக்க ஆட்டக்காரர்களில் குசல் மெண்டிஸ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். நம்பிக்கை அளித்த நிஷாங்காவும் விரைவில் ஆட்டமிழந்தார். தனஞ்சய டி சில்வா ஓரளவிற்கு தாக்கு பிடித்து விளையாடினார். ஆனாலும் விக்கெட்டுகள் சரிந்து கொண்டேதான் இருந்தன. 50 ரன்களை கடந்த இலங்கை அணி, கேப்டனோடு சேர்த்து 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இக்கட்டான நேரத்தில் ஜோடி சேர்ந்த ராஜபக்சே மற்றும் ஹ்சரங்கா இருவரும் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் பார்ட்னர்ஷிப் கொண்டுவந்தார்கள். அடுத்து ஹசரங்கா ஆட்டம் இழந்ததும் கருணாரத்னே வந்தார். அவருடன் சேர்ந்து அரைசத பார்ட்னர்ஷிப்பை ராஜபக்சே கொண்டுவந்தார். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி170 ரன்கள் குவித்தது. ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தின் போது ராஜபக்சே தூக்கி அடித்த ஒரு பந்தை சதாப் கான் பிடிக்க தவறினார். அடுத்து மீண்டும் ராஜபக்ஷ தூக்கி அடிக்க பந்து பகர் ஜமான் இடம் சென்றது. ஆனால் ஏற்கனவே கேட்சை விட்டு இருந்த சதாம் கான் வேகமாக ஓடிவந்து இடையில் புகுந்து பந்தை தட்டி விட்டு கடுமையாக மோதி காயம் அடைந்து மைதானத்தில் விழுந்துவிட்டார். பிறகு நீண்ட நேரம் அவரால் நகரக் கூட முடியவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பொருத்தவரை அவர்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் பீல்டிங்கின் போது இப்படி எதையாவது செய்து ஆட்டத்தை திசை மாற்றிக்கொள்வார்கள். இந்த ஆசிய கோப்பையில் அப்படி எதுவும் நடக்காமல் இருந்தது. ஆனால் அந்தக் குறையை தற்போது இவர்கள் தீர்த்து வைத்து விட்டார்கள். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இதை குறிப்பிட்டு பாகிஸ்தான் அணியை கேலி செய்து வருகிறார்கள்.