என்னப்பா சொல்றிங்க நீங்க.. ரசிகர்களை அட போட வைத்த ரோகித் மற்றும் ஸ்டெய்ன்.. என்ன நடந்தது?

0
642
Rohit

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்ஆரம்பிக்க இருப்பதை எடுத்து, ஓய்வு பெற்ற மற்றும் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் மிக சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்!

எப்பொழுதுமே ரசிகர்களிடையே மற்றும் வீரர்களிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் என்றால் எப்பொழுதும் பழக்கத்திற்கு மாறான செயல்பாடும் எதிர்பார்ப்பும் இருக்கும்.

- Advertisement -

அதுவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர என வரும்பொழுது இன்னும் எதிர்பார்ப்புகளும் வீரர்களின் செயல்பாட்டு அணுகுமுறைகளும் நிறைய மாற்றம் அடையும். ரசிகர்கள் மறக்க முடியாத போட்டிகள் கிடைக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட் மிக நீண்ட வடிவம், டி20 கிரிக்கெட் மிக குறுகிய வடிவம். கிரிக்கெட்டுக்கு சரியான வடிவம் ஒரு நாள் கிரிக்கெட் வடிவம்தான்.

இந்த வடிவத்தில் விளையாடுவதற்கான சவால்கள் சரிசமமாக இருக்கும். சிறப்பான ஒருநாள் கிரிக்கெட் அணியை உருவாக்குவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. அதேபோல் போட்டியில் எந்த நேரத்திலும் எந்த அணியும் முன்னேறி செல்ல கொஞ்சம் நேரம் இருக்கும்.

- Advertisement -

இதனால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரும்பொழுது மிகவும் உற்சாகமாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து ரசிகர்கள் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் வெளிவரும்.

இந்த வகையில் நேற்று ரோகித் சர்மா தனிப்பட்ட பேட்டியில் கலந்து கொண்டு பேசிய பொழுது, தான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று டேல் ஸ்டெய்ன் தான் பந்து வீசியதில் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா என்று திருப்பி கூறியிருக்கிறார். இது ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இருவருமே கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரர்கள். இருவருமே ஒருவருக்கொருவர் சிறப்பான சவால்களை விளையாட்டில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பது, இருவரது கருத்திலிருந்து தெரிய வருகிறது.