என்னப்பா சொல்ற?.. “கோலி ரோஹித் விளையாடாதது பத்தி எனக்கு கவலை இல்ல” – கில் அசால்ட் பேச்சு!

0
279
Gill

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்று இரண்டாவது போட்டியில் தோற்ற போது மிகப்பெரிய விமர்சனங்கள் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்தன!

இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் விளையாடாத இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மூன்றாவது போட்டியில் தொடரை கைப்பற்றுவதற்காக களம் இறங்குவார்களா? என்கின்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் நிலவியது.

- Advertisement -

ஆனால் இந்திய அணி நிர்வாகம் மூன்றாவது போட்டிக்கும் இவர்கள் இருவரையும் களம் இறக்காமல், மேலும் ருதுராஜ் மற்றும் உன்ட்கட் இருவருக்கும் புதிதாக வாய்ப்பு தந்து களம் இறக்கியது. இந்த முடிவு போட்டிக்கு முன்பாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

சீனியர் வீரர்களைக் கொண்ட அணி எப்படி விளையாடும் அதே போல ஜூனியர் வீரர்கள் மிகப் பிரமாதமாக விளையாடி 351 ரன்கள் சேர்த்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை 151 ரன்களுக்கு சுருட்டி, 200 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியில் துவக்க வீரரான சுப்மன் கில் 92 பந்துகளில் 11 பவுண்டரி உடன் 85 ரன்கள் குவித்தார். இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவருக்கு இதுதான் முதல் அரை சதம். மேலும் அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற சுப்மன் கில் பேசும் பொழுது “இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இந்த சுற்றுப்பயணத்தில் எனக்கு இதுதான் முதல் அரை சதம். அணிக்கு பெரிய ஸ்கோரை கொண்டு வர சதம் கிடைக்கும் என்று நினைத்தேன்.ஆனால் அது நடக்கவில்லை. இருந்தாலும் வெற்றி எங்கள் பக்கம் இருந்தது.

இந்த ஆடுகளம் ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. பந்து பழையதானதும் விளையாடுவது கடினமானது. இது சூழ்நிலையை புரிந்து கொண்டு விளையாடுவது பற்றியது. விரைவாக மதிப்பீடு செய்தாக வேண்டும்.

ஒரு தொடக்க வீரராக அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பது துவக்க வீரரின் கடமை. நான் அதை செய்ய நினைத்து, அதைச் செய்தும் இருக்கிறேன். கடைசிப் போட்டியில் அதற்கான அடித்தளத்தை அமைத்து பெரிய ஸ்கோருக்கு விளையாடினேன்.

நான் விளையாடும் பொழுது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அதிரடியாக விளையாடினேன். இந்த வழியில்தான் ஒருநாள் போட்டி செல்லும். நான் வெளிப்புற காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அணியில் யார் விளையாடுகிறார்கள்? யார் விளையாடவில்லை? என்பதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. என்னால் முடிந்ததை நான் செய்ய முயற்சிக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!