ஹர்திக் பாண்டியாவுக்கும் தல தோனிக்கும் என்ன ஒற்றுமை? – தமிழக வீரர் சாய் கிஷோர் அசத்தல் பேட்டி!

0
112
Sai Kishore

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனில் ஹர்திக் பாண்டியா தனது வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் , முன்னணி வீரராக இருந்தவரை அந்த அணி தக்கவைக்க தவற , அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரை குஜராத் இழுத்து அரவானைத்து கொண்டது .

இதற்கிடையில் இவர் காயங்களுக்கு மத்தியில் பந்துவீச இயலாததால் , இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார், ஆனால் அவர் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறந்து விளங்கினார், அதே நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி கோப்பையை கைப்பற்றினார்.

- Advertisement -

அப்போதிலிருந்து, பாண்டியா இந்திய அணியில் ஒரு முக்கிய அம்சமாக மாறினார், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தனது பந்துவீச்சு தகுதியை படிப்படியாக அதிகரித்து, பல சந்தர்ப்பங்களில் அணியை வழிநடத்தியுள்ளார். ஒரு அணியின் கேப்டனாக இருக்கும் போது அவரது அமைதியான நடத்தை, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் பாண்டியாவை , தோனியுடன் ஒப்பிடுவதற்கு வழிவகுத்தது. இருவர் கீழும் விளையாடியவர்களும் அவ்வாறே கூறி வருகிறார்கள்.

கடந்த சீசனில் குஜராத் அணிக்காக ஐந்து போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய சாய் கிஷோர், சிஎஸ்கே அணியிலும் இரண்டு சீசன்கள் விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த இருவர்கள் பற்றியும் சாய் கிஷோர் கூறுகையில் ” பாண்டியா மற்றும் எம்.எஸ். தோனி அவர்கள் விஷயங்களைக் கையாளும் விதத்தில் மிகவும் ஒத்தவர்கள், அவர்கள் இருவரும் மிகவும் அமைதியானவர்கள். பாண்டியாவை பற்றி நான் மிகவும் சந்தோசபடும் ஒரு விஷயம், வெற்றி மற்றும் தோல்வியை சமமாக கையாளும் அவரது திறமை – அது அவரைப் பற்றி மிகவும் தனித்துவமாக்குகிறது. அவர் ஒரு சிறந்த அணித்தலைவர் மற்றும் அதற்கு ஏற்ற வகையில் திட்டங்களையும் வகுத்து செயல்படுத்துகிறார் ” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் அவர் கூறுகையில் “கடந்த சீசனில் வெற்றிபெற்ற நாங்கள் இந்த சீசனிலும் அதை தொடர , கடந்த சீசனைப்போல் கடினமாக உழைக்க வேண்டும். நடப்பு சாம்பியன் என்ற அடையாளத்தை தக்க வைப்பதா, இல்லையா என்பது நம்மைப் பொறுத்தது. கடந்த ஆண்டு நாங்கள் நன்றாக விளையாடினோம், அதனால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம். அதைச் செய்ய முடிந்தால் இந்த முறையும் சவாலாக இருக்காது என்று நினைக்கிறேன் ” என்று கூறினார்.

ஐபிஎல்லில் இம்பாக்ட் ப்ளேயர் , என்ற புதிய விதி பற்றி சாய் கிஷோர் கூறும்போது “இது ஒரு பந்து வீச்சாளர் அல்லது பேட்ஸ்மேனைப் பயன்படுத்தக்கூடிய சூப்பர்-சப் விதி போன்றது. நாங்கள் ஏற்கனவே உள்நாட்டு கிரிக்கெடில் இந்த விதியுடன் விளையாடியுள்ளோம். ஒரே மாற்றம் , இதில் 20வது ஓவர் வரை பயன்படுத்தலாம், உள்நாட்டில் இது 14வது ஓவர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. 20 ஓவர்களில் அதை கையாள மிகவும் எளிதாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்