“லிட்டன் தாஸ் கோபப்படும்படி என்ன சொன்னிங்க?” – முகமது சிராஜ் பதில்!

0
3395
Siraj

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இரண்டாம் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணியின் 133 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது . 278 ரண்களுக்கு 6 விக்கெட் இழப்புடன் இன்றைய நாளை தொடங்கிய இந்திய அணி 404 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது .

இந்திய அணிக்காக புஜாரா 90 ரன்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களையும் அஸ்வின் 58 ரண்களையும் சேர்த்தனர் . பங்களாதேஷ் அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது . அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிக்குர் ரஹீம் 28 ரண்களையும் லிட்டன் தாஸ் 24 ரன்களையும் சேர்த்தனர் . இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்றைய நாள் முடிவுக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முகமது சிராஜிடம் அவருக்கும் லிட்டன் தாசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் பற்றி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்து பேசிய சிராஜ் ” டெஸ்ட் போட்டிகளின் போது முக்கியமான கட்டங்களில் இது போன்ற மோதல்கள் நிகழ்வது சகஜம் தான் . நான் அவரிடம் வேறு எதுவும் கூறவில்லை” என்று புன்னகைத்தவர் கூறினார்

மேலும் இது பற்றி பேசிய அவர் ” இது டி20 கிரிக்கெட் போட்டி அல்ல டெஸ்ட் போட்டி தான் அதை மனதில் வைத்துக் கொண்டு விளையாடவும் “என்று லிட்டன் தாசிடம் கூறியதாக தெரிவித்தார். லிட்டன் தாஸ் சைகை செய்த அடுத்த பந்திலையே அவரை கிளீன் போல்ட் ஆக்கி விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சைகை செய்தது இன்றைய ஆட்டத்தின் ஹைலைட்டாக அமைந்தது.

- Advertisement -

தொடர்ந்து இன்றைய போட்டி பற்றி பேசிய சிராஜ் ” இந்திய அணியின் பந்துவீச்சு நன்றாக இருந்தது நாளை விரைவாக பங்களாதேஷ் அணியின் மீதம் இருக்கும் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி விட்டு இந்த டெஸ்ட் போட்டியை விரைவில் முடிக்க முயற்சி செய்வோம்” என்று தெரிவித்தார் .