“இப்ப என்ன நீலிக் கண்ணீர் வடிக்கிறியா?” – தினேஷ் கார்த்திக்கை தாக்கிய குல்திப் யாதவ் கோச்

0
1063
Kuldeep

சுழற் பந்து வீச்சை வைத்து எதிரணிகளுக்கு எதிராக மிகச்சிறப்பாக கேப்டன்ஷி செய்வதில் மகேந்திர சிங் தோனி மிகப்பெரிய வல்லவர். இவரது சுழல் வியூகங்கள் களத்தில் அபாரமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது!

மகேந்திர சிங் தோனி ஆரம்பத்தில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர்களையும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். இறுதியாக கேதர் ஜாதவ் கூட கொண்டு வந்து நல்ல தாக்கத்தை தந்திருக்கிறார்!

- Advertisement -

பின்பு முழு நேர சுழப்பந்துவீச்சாளர்களாக விரல் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை வைத்து இயங்கினார். இந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரையும் உருவாக்கிய பெருமை இவருக்கே சேரும்!

இதற்கடுத்து விரல் ஸ்பின்னர்களின் வேலை முடிந்து விராட் கோலி தலைமையில் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களான சாகல் மற்றும் குல்தீப் கொண்டுவரப்பட்டார்கள். இவர்கள் அணிக்குள் வந்த காலகட்டத்தில் எதிரணிகளை தங்களது மாயாஜால பந்துவீச்சால் அடக்கி ஆண்டார்கள்.

ஆனால் ஒரு கட்டத்தில் சாகல் ஓரளவுக்கு அடி வாங்க, மெல்லிய மனம் கொண்ட குல்தீப் ஏற்பட்ட சரிவை தாங்காமல் முற்றிலுமாக சரிந்து விட்டார். மேலும் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த பொழுது மூன்று ஐபிஎல் சீசன் களில் 13 ஆட்டங்கள் தான் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் 2021 ஆம் ஆண்டு ஒரு ஆட்டம் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

தற்போது இதுபற்றி பேசி உள்ள குல்தீப் பயிற்சியாளர் கபில் பாண்டே ” தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த பொழுது குல்தீப் அந்த அணியில் அங்கம் வகித்த பொழுது ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் மட்டுமே வீச தந்தார். ஆனால் இப்பொழுது அதை எல்லாம் மறந்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்த இந்திய பந்துவீச்சாளர் குல்திப் என்று பேசுகிறார். அவர் உங்களுக்கு மிகவும் பிடித்த பந்துவீச்சாளர் என்றால் அவருக்கு நீங்கள் ஏன் பந்து வீச வாய்ப்பு தரவில்லை? ஆனால் பரவாயில்லை போகட்டும். இனி குல்தீப்பின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” குல்தீப் கொல்கத்தா அணியில் மோசமாக புறக்கணிக்கப்பட்டார். ஆனால் தற்போது டெல்லி அணியில் சூழ்நிலை அதற்கு முற்றும் மாறானதாக இருக்கிறது. கேப்டன் ரிஷப் பண்ட் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் துணை பயிற்சியாளர் சேன் வாட்சன் மற்றும் அணியில் பலர் அவருக்கு நன்றாக ஆதரவு அளித்தார்கள். அது அவரை மிகவும் சுதந்திரமாக செயல்பட உதவியது. குல்தீப் எல்லா ஆட்டத்திலும் விளையாடுவார் என்று பாண்டிங் கூறினார். ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் இதைக் கேட்கும் பொழுது உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். கேப்டன் ரிஷப் பண்ட் அவருக்கு எல்லா நேரத்திலும் ஆதரவாக இருந்தார். குல்தீப்பின் மறுபிரவேசத்தில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு” என்று பெருமையாக கூறியிருக்கிறார்.