“என்ன சொல்றது.. டாஸ் போட்டதும் மேட்ச் முடிஞ்ச மாதிரி இருக்கு” – கேஎல் ராகுல் வெளிப்படை பேச்சு!

0
398
Rahul

இந்திய அணி தனது 31 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில், முதல்முறையாக கேப் டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

மேலும் இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் வெற்றி பெற்ற முதல் ஆசிய கண்டத்து கிரிக்கெட் நாட்டின் கேப்டனாக ரோஹித் சர்மா தனது பெயரை பதிவு செய்திருக்கிறார். இங்கு தென் ஆப்பிரிக்க அணியை ஆசிய கண்டத்து கிரிக்கெட் நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் வென்றதே கிடையாது.

- Advertisement -

நடந்து முடிந்த இந்த போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றி இருக்கிறது. ஆனால் இச்சிறப்பான வெற்றி பலராலும் வெளியில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

காரணம் இந்த போட்டி மொத்தம் 107 ஓவர்கள் மட்டுமே நடைபெற்றது. இரண்டு அணிகளின் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினார்கள். பேட்ஸ்மேன்கள் வழக்கமாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முறையில் விளையாட ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை. அதிரடியாக விளையாடி வர ரன்களை எடுத்துக் கொள்ள மட்டுமே பேட்ஸ்மேன்கள் நினைக்கும் அளவுக்கு ஆடுகளம் இருந்தது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓவர்கள் விளையாடப்பட்ட டெஸ்ட் போட்டியாக இது மாறி இருக்கிறது. மொத்தமாக இந்த போட்டியில் 642 பந்துகள் மட்டுமே இரு அணி பந்துவீச்சாளர்களாலும் வீசப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டி குறித்து பேசி உள்ள கேஎல்.ராகுல் கூறும் பொழுது “வெளிப்படையாக இந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு எனக்கு இது மூன்றாவது தொடர். ஒவ்வொரு முறை வரும் பொழுதும் இங்கு நாங்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்தோம். ஆனால் தோல்வி அடையவே செய்தோம்.

எனவே இந்த வெற்றியை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் உணர்ச்சிகளின் அடிப்படையில் நேர்மையாக என்ன என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. டாஸ் போடப்பட்டதும் ஆட்டம் முடிந்து விட்டது போல் இருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு நாங்கள் தயாராக இல்லை என்று கூற முடியாது. அதிலிருந்து நாங்கள் எங்களுடைய அணுகு முறைகளும் திட்டத்திலும் சிறிய மாற்றத்தை செய்தோம். நாங்கள் தயாராக இருந்தும்தான் தோற்றோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிலவேளைகளில் இது நடக்கும். உங்களின் ஒரு தவறில் எதிரணி உங்களை போட்டியிலிருந்து வெளியேற்றி விடும். இந்தியாவுக்கு வெளியே டெஸ்ட் வெற்றிகள் எவ்வளவு முக்கியம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது!” என்று கூறி இருக்கிறார்!