உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வாய்ப்பு எப்படி எவ்வளவு இருக்கிறது!

0
574
ICT

இந்திய அணி பங்களாதேஷை நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சந்திக்கிறது இரண்டு அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பங்களாதேஷ் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் இந்திய அணிக்கு இது முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

முக்கிய வீரர்கள் காயமடைந்த நிலையில் இளம் வீரர்களுடன் களம் இறங்கும் இந்திய அணி ஒரு நாள் போட்டி தொடரை இழந்திருப்பதால் டெஸ்ட் தொடரை கைப்பற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி ஆட்டமும் நெருங்கி வருவதால் இந்திய அணிக்கு இது முக்கியமான ஒரு தொடராகும்.இந்த தொடரையும் வெற்றி பெற்று இதன் பிறகு நடக்க இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரையும் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டிகளுக்கு தகுதி பெறும் .

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் பாகிஸ்தான் அணி தோற்றுள்ளதால் இந்திய அணியின் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.ஆனாலும் இந்திய அணி அவர்களுக்கு எஞ்சி இருக்கும் 6 போட்டிகளையும் வெற்றி பெற வேண்டும் அப்படி 6 போட்டிகளையும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணியின் வின்னிங் சதவிகிதம் 68.06 ஆக இருக்கும்,இதன் மூலம் அவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 75% உடன் முத்லிடத்திலும் 60% உடன் தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்திலும் 53.33% உ.டன் இலங்கை அணி மூன்றாம் இடத்திலும் 52
08% உடன் இந்திய அணி நான்காம் இடத்திலும் உள்ளன.42.42% உடன் பாகிஸ்தான் அணி 6ம் இடத்தில் உள்ளது இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற தோல்வியை அடுத்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது .

தற்போது தென்னாபிரிக்க அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட உள்ளது இத்தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றும் பட்சத்தில் அவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் . தற்போது இரண்டாமிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணி அவர்களுக்கு இருக்கும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

மூன்றாவது இடத்தில இருக்கும் இலங்கை அணி அவர்களுக்கு இருக்கும் நியூசிலாந்து அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல வேண்டி இருப்பதால் இலங்கை அணி தகுதி பெரும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது .