என்ன மாதிரியான ஆட்டம்! ரிங்கு சிங் இன்டர்நேஷனல் குவாலிட்டி இருக்க பிளேயர்; எதிர் டீம் கோச்சே ரிங்கு சிங்கை புகழ்ந்து தள்ளினார்!

0
419
Andy

நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியில் லக்னோ ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது!

இந்தப் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 41 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, உடன் விளையாட பேட்ஸ்மேன்கள் இல்லாமல் ரிங்கு சிங் தனித்து விளையாடி தோல்வியின் வித்தியாசத்தை ஒரு ரன் என மாற்றினார்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் முழுக்க அவர் பினிஷிங் இடத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 14 ஆட்டத்தில் 478 ரன்கள் மற்றும் 4 அரை சதங்கள், 59 ரன் ஆவரேஜ் மற்றும் 149 ஸ்ட்ரைக் ரேட், 28 சிக்ஸர்கள் என பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ரிங்கு சிங்கின் ஆட்டம் குறித்து லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் மிகவும் வியந்து புகழ்ந்து பாராட்டி பேசி இருக்கிறார்.

இது குறித்து ஆன்டி பிளவர் கூறுகையில்
“அவர் உண்மையிலேயே திறமையான பையனாகத் தெரிகிறார். அவரிடம் வெற்றிக்கான பசி இருக்கிறது அதே சமயத்தில் பணிவாகவும் இருக்கிறார். மேலும் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதில் அவர் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறார். அவருக்கு நல்ல பேக்கேஜ் உண்டு.

- Advertisement -

இந்தியாவில் நிறைய பேட்டிங் திறமைகள் இருக்கின்றன. ஆனால் இவர் அழுத்தத்தில் இருக்கும் பொழுது சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என காட்டுகிறார். இதுதான் சர்வதேச கிரிக்கெட் செயல்படுவதற்கு முக்கியமான அம்சமாகும். எனவே அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

ரிங்கு சிங் மீண்டும் தனது வழக்கமான முறையில் பொறுப்பெடுத்துக் கொண்டு விளையாடினார். மேலும் அந்த குறிப்பிட்ட கடைசி ஓவர்களில் அவர் வெளிப்படையாக எந்த தவறையும் செய்யவில்லை. அவர் அழகாகவும் அற்புதமாகவும் பேட்டிங் செய்தார்.

நாங்கள் வீச வேண்டிய சரியான இடத்தில் பந்தை வைக்கவில்லை. ஆனால் எங்கள் அணியின் நவீன் மற்றும் யாஷ் தாகூர் இருவரும் கடைசி கட்ட ஓவர்களில் தொடர்ச்சியாக ஓவர்களை வீச வேண்டிய கஷ்டமான வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.