“ரஸ்ஸல் இல்லை,சுனில் நரேன் இல்லை..” டி20 உலககோப்பைக்கு 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

0
269

டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முறை டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை தரவரிசை பட்டியலில் பின்தங்கி உள்ளதால், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக உலகக் கோப்பை குவாலிபயர் சுற்றில் விளையாட உள்ளது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் குவாலிபயர் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அடுத்ததாக ஜிம்பாப்வே, அதற்கு அடுத்ததாக அயர்லாந்து ஆகிய அணிகளுடன் மோதுகின்றது.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 14ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இந்த அணிக்கு கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். துணை கேப்டனாக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டிருப்பது கவனத்தைப் பெற்றிருக்கிறது. ஏனெனில் சமீப காலமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இவர் அசாத்தியமாக பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கரீபியன் பிரிமியர் லீக் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்த யானிக் கரியா மற்றும் ரேமன் ரீஃபர் ஆகிய இருவரும் இந்த அணிக்குள் எடுத்துவரப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் முதல்முறையாக சர்வதேச அணியில் இடம்பெற்று இருக்கின்றனர்.

இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் துவக்க வீரர் எவின் லீவிஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் வந்திருக்கிறார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடரில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது மீண்டும் இடம் பிடித்திருக்கிறார்.

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பட்டியலை வெளியிட்ட பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை தேர்வுக்குள் அதிகாரி: “இந்த அணியை நாங்கள் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் கலந்த கலவையாக தேர்வு செய்து இருக்கிறோம். சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாது, உள்ளூர் போட்டிகளிலும் அபாரமாக விளையாடுவோர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எப்படி செயல்படும் என்பதை நாங்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிப்போம்.” என்றார்.

- Advertisement -

உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி:

நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மேன் பவல் (துணை கேப்டன்), யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், ரேமன் ரீஃபர், ஓடியன் ஸ்மித்.