வெஸ்ட் இண்டீஸ் சர்வதேச வீரருக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை ; அதிர்ச்சி தகவல்!

0
437
WI

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி என்பது, மேற்கிந்திய பல தீவு கூட்டங்களை ஒருங்கிணைத்த ஒரு அணியாகும். இதில் ஜமைக்கா மிக முக்கியமான ஒரு தீவாகும். இங்கிருந்து நிறைய பிரபல கிரிக்கெட் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வந்திருக்கிறார்கள்!

தற்பொழுது ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு குழு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி வேகமாக வளர்ந்து வந்த இளம் வீரர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் விளையாட தடை விதித்து அறிவித்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கிங்ஸ்டனில் தனது வீட்டில் இருந்த ஜான் கேம்பல் எனும் இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரரிடம் இருந்து, ஊக்க மருந்து பரிசோதனை செய்வதற்காக ரத்த மாதிரி கேட்கப்பட்டது. ஆனால் அவர் அதை தர மறுத்துவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆசையாக இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஜூன் மாதம் விளையாடினார்.

ஊக்க மருந்து பரிசோதனைக்கு இந்த வீரர் ஒத்துழைக்காத காரணத்தால் ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு குழு மூன்று நபர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து விசாரித்தது. இந்தக் குழு 18 பக்க விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் “விளையாட்டு வீரர் ஊக்க மருந்து எதிர்ப்பு விதியை மீறியதாக அதாவது ஜாட்கோ 2.3 யை மீறியதாக விசாரணைக்குழு உறுதியாக நம்புகிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “விளையாட்டு வீரர் ஊக்க மருந்து பரிசோதனைக்கு ஒத்துழைக்காது வேண்டுமென்றே நிகழவில்லை என்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தண்டனை தொடர்பாக கூறும் பொழுது ” இந்த வழக்கின் சூழ்நிலையில், குறிப்பிட்ட தடகள வீரர் ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறியதாக, அதாவது ஜாட்கோ விதியை மீறியதாக இந்தக் குழு உறுதியான முடிவுக்கு வருகிறது. ஜாட்கோ விதி 10.3.1
படி இந்த குறிப்பிட்ட வீரருக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை இந்த ஆண்டு மே மாதம் முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்று கூறப்பட்டுள்ளது!