வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுமே போட்டிக்கு முன்பாகவே பிளேயிங் லெவனை வெளியிட்டு வருகின்றன.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 114 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றது.
நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து சாதனை வீரர் ஆண்டர்சனுக்கு கடைசி டெஸ்ட் என்கின்ற காரணத்தினால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி எந்த விதமான போட்டியையும் கொடுக்காமல் சரணடைந்த தோற்றதால் சுவாரசியம் இல்லாமல் போய்விட்டது.
மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்த பொழுதும் இரண்டாவது டெஸ்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தைரியமாக பிளேயிங் லெவனை மாற்றாமல் வருகிறது.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் தரப்பில் கூறும் பொழுது “வீரர்கள் சென்று விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். நாங்கள் நன்றாக பேட் செய்து ஸ்கோர் போர்டில் ரன்கள் போடுவதற்கு ஏதாவது வழியை கண்டுபிடிக்க வேண்டும்.நாங்கள் முதல் டெஸ்டில் விளையாடிய எங்களுடைய வீரர்களை 100% நம்புகிறோம். அவர்கள் இரண்டாவது டெஸ்டிலும் விளையாடுவார்கள். ஷாமர் ஜோசப் தற்பொழுது நன்றாக இருக்கிறார்” என்று கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : 16 வருஷம் முன்ன.. விராட் பண்ண அது சிரிப்பா இருந்தது.. ஆனா இப்ப நம்ப முடியல – ராபின் உத்தப்பா பேட்டி
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் :
கிரெய்க் பிரைத்வைட் (கே), அலிக் ஆதனஸ், ஜோசுவா டா சில்வா (வி.கீ), கவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், ஷமர் ஜோசப், மைக்கேல் லூயிஸ், கிர்க் மெக்கென்சி, குடகேஷ் மோட்டி மற்றும் ஜெய்டன் சீல்ஸ்.