மெல்போர்னில் மழை இருக்கா? இல்லையா? – டக்வொர்த்-லூயிஸ் முறை பயன்படுத்தப்படுமா? – போட்டிக்கு 2 மணி நேரத்திற்கு முன் வந்த ரிப்போர்ட்!

0
190

மெல்பர்ன் மைதானத்தில் இன்று மழை வருமா? வராதா? என்று நிலவிவரும் குழப்பங்களுக்கு தற்போது சற்று தெளிவான பதில் கிடைத்திருக்கிறது.

டி20 உலக கோப்பை தொடரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி சூப்பர் 12 சுற்றில் இன்று மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியை கண்டுக்களிக்க கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட் பெற்று இருக்கின்றர் என்பதால் கூடுதல் சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் ஏற்கனவே வீரர்களிடம் அறிவிக்கப்பட்டுவிட்டது. முழுவீச்சில் தயாராகி வருகின்றனர் என ரோகித் சர்மா கூறியிருந்தார்.

அதேபோல் பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு எதிராக எந்த 11 வீரர்களை களம் இறக்க வேண்டும் என்று தெளிவாக இருப்பதாக பாபர் அசாம் இரு தினங்களுக்கு மட்டும் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

போட்டியை பற்றி ரசிகர்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை ஆனால் மெல்பர்ன் மைதானத்தைச் சுற்றி நிலவி வரும் வானிலை அறிக்கை தான் பலருக்கும் குழப்பமாக இருந்து வருகிறது. ஏனெனில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது.

- Advertisement -

போட்டியின்போதும் இந்த மழைப்பொழிவு நீடித்து ஆட்டம் தடைபடுமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது. தற்போது மெல்பர்ன் மைதானத்தில் எப்படியான வானிலை நிலவி வருகிறது என்பதை காண்போம்.

தற்போது வெப்பநிலை 19 டிகிரி ஆக இருக்கிறது. வானம் மிகவும் தெளிவாக இருக்கிறது. எந்த வித மேகமூட்டமும் இல்லை. காற்றின் ஈரப்பதம் 93 சதவீதம். மழை பொழிவதற்கு கிட்டத்தட்ட 70 சதவீதம் வாய்ப்புகள் இருக்கிறது என்று மெல்பர்ன் நகரின் வானிலை அறிஞர்கள் கணித்துள்ளனர்.

இன்றைய நாளின் பிற்பகுதியில் தான் மழைப்பொழிவு வரும் என்பதால், அதற்குள் போட்டி முடிந்து விட்டால், எந்தவித பாதிப்பும் இருக்காது. இல்லையேல் ஆட்டம் நீடிக்கும் பட்சத்தில் இரண்டாம் பாதியில் மழை பொழிவு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

அப்படி போட்டியின் நடுவே மழை வரும் பட்சத்தில் டக்வோர்த்-லூயிஸ் முறைப்படி ஆட்டத்தின் போக்கு மாறலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

இரு அணி வீரர்களும் இன்று இந்திய நேரப்படி 10:45 மணிக்கு மேல்பர்ன் மைதானத்திற்கு வந்துவிட்டனர். தங்களது பயிற்சியை துவங்கிவிட்டனர் என்று தகவல்கள் வருகிறது.