“விராட் கோலியை இந்த முறையும் விட மாட்டோம்!” – பங்களாதேஷ் பயிற்சியாளர் டொனால்ட் சவால்!

0
1122
Viratkohli

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்து தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கே.எல்.ராகுல் தலைமையில் விளையாடி வருகிறது!

இந்தத் தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. புஜாரா, கில் ஆகியோர் பேட்டிங்லும், குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் பிரமாதமாகச் செயல்பட்டார்கள்!

- Advertisement -

இந்த தொடரின் இரண்டாவது போட்டி நாளை மிர்பூர் மைதானத்தில் துவங்க இருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக விராட் கோலிக்கு சதங்கள் வராமல் இருக்க, சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அவருக்கு சதம் வந்தது. அதேபோல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இப்பொழுது பங்களாதேஷ் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சதம் வந்தது. இதேபோல் அவருக்கு இதே தொடரில் டெஸ்ட் சதம் வருமா? என்ற எதிர்பார்ப்பு அணி நிர்வாகம், ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது!

இதுகுறித்து பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் தலைசிறந்த தென்னாபிரிக்க முன்னாள் வேதப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் சில முக்கியமான கருத்துக்களை மிக தைரியமாகப் பயிற்சியாளராகக் கூறி இருக்கிறார்.

இது பற்றி ஆலன் டொனால்ட் பேசும்பொழுது ” விராட் கோலிக்கு பந்து வீசுவது என்பது சச்சினுக்கு பந்து வீசுவது போல. இவர்களுக்கு எதிராக பந்து வீசும் பொழுது சரியாக வீச வேண்டியதின் அவசியத்தை நாம் உணர்வோம். விராட் கோலிக்கு எதிரான ஒரு நல்ல வாய்ப்பை நாம் இழந்தால் அது எத்தகைய பாதிப்பை ஆட்டத்தில் உண்டாக்கும் என்பது தெரிந்த விஷயம். இந்த விஷயத்தில் நாங்கள் இதுவரை நன்றாகவே இருந்திருக்கிறோம்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” விராட் கோலி ரன் பசியுடன் இருப்பதை நான் அறிவேன். அவர் இந்த டெஸ்ட் தொடரில் ஒரு சதத்துடன் வெளியேற விரும்புகிறார். இதுவரை அவருக்கு எதிராக நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளோம் என்று நம்புகிறேன். நாளையும் அது தொடரும் என்றே நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார்!