இந்தியா இங்கிலாந்து இரண்டில் இந்த அணி தான் எங்களுக்கு இறுதி போட்டிக்கு வேண்டும் – பாகிஸ்தான் டீம் மெண்டர் மேத்யூ ஹைடன்!

0
37973
Hayden

முதல் சுற்றில் இந்திய அணி உடன் தோற்று அடுத்து சிறிய அணியான ஜிம்பாப்வே அணி உடன் எதிர்பாராத விதமாக தோற்று, தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியிடம் மோசமாக விளையாடி தோற்க, இடையில் மிகச் சிறப்பாக மீதி ஆட்டங்களை விளையாடிய பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு வந்து ஆச்சரியப்படுத்தியது!

இன்று முதல் அரை இறுதி போட்டியில் சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சு ஃபீல்டிங் பேட்டிங் என மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் 5 பந்துகள் மீதம் வைத்து மிக எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு வந்து அசத்தியிருக்கிறது!

- Advertisement -

இந்த போட்டியில் இன்னொரு சிறப்பு விஷயமாக இதுவரை இந்தத் தொடரில் மிகச் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆஸம் இருவரும் அரைசதம் அடித்து அசத்தி பார்முக்கு திரும்பி வந்திருக்கிறார்கள்!

இதைவிட இன்னொரு நல்ல விஷயமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் தனது சிறப்பான பந்துவீச்சு ரிதத்துக்கு வந்திருக்கிறார். இது எல்லாம் பாகிஸ்தான் அணிக்கு இந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு மிக மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கும் விஷயங்களாக மாறியிருக்கிறது!

தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு மென்டராக உள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் இடது கை துவக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் சில முக்கியமான கருத்துக்களை போட்டியின் வெற்றிக்குப் பிறகு பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

மேத்யூ ஹைடன் கூறும் பொழுது
” இன்று இரவு எங்களுக்கு மிகவும் சிறப்பானது. எங்களிடமிருந்து சில விஷயங்கள் இன்று வெளிப்பட்டன. இன்று எல்லோரும் பாபர் மற்றும் ரிஸ்வான் பற்றி பேசுவார்கள். ஆனா எங்களின் பந்துவீச்சு ஒரு நம்ப முடியாத வேலையை செய்தது. இவர்களுக்கு வானம்தான் எல்லை. பாபர் மற்றும் ரிஸ்வான் பாகிஸ்தான் அணிக்காக இதை பலமுறை செய்திருக்கிறார்கள். மேலும் இங்கு நான் முகமது ஹாரிஸ் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். அவர் வலைப்பயிற்சியில் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்குகிறார் ” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்த ஆடுகளத்தில் எங்களது பந்து வீச்சு முறையை நாங்கள் மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. நாங்கள் ஷாகினை திரும்ப எழுந்து ஓட வைத்திருக்கிறோம். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக ஆரம்பித்தவுடன் அவரை எதிர்கொள்வது எல்லோருக்கும் கடினமாகி போனது. அதேபோல் ஹாரிஸ் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீச முடியும். நான் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்பார்க்கிறேன். அப்படி நடந்தால் அது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றாக இருக்கும் ” என்று கூறியுள்ளார்!