ஜடேஜா, கேஎல் ராகுல் சூப்பரா ஆடுனாங்க.. ஆனால் எங்களோட தோல்வி உறுதியானதுக்கு காரணம் அவர்கள் இல்லை, வேறு ஒன்று – ஸ்டீவ் ஸ்மித் ஆவேசமாக பேட்டி!

0
279

நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தோல்வி உறுதியானது இந்த இடத்தில் தான் என்று ஸ்டீவ் ஸ்மித் பேட்டி அளித்துள்ளார்.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

விரைவாக முதல் விக்கெட்டை இழந்த பிறகும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகச்சிறந்த ஆட்டம் கிடைத்தது. இதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் மிச்சல் மார்ஷ். இவர் 81 ரன்களை விளாசினார்.

ஒரு கட்டத்தில் 129 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை மட்டுமே ஆஸ்திரேலியா அணி இழந்திருந்தது. இதனால் 300-350 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். இதற்கு முழு முக்கிய காரணம் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் தான்.

அதன்பிறகு சேஸ் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களுக்கு விக்கெட் எடுத்து, ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறடித்தனர்.

- Advertisement -

ஒரு முனையில் கேஎல் ராகுல் நன்றாக நின்று கொண்டார். மறுமுனையில் வந்த ஹார்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இருவரும் ஆங்காங்கே பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.

5வது விக்கெட்டுக்கு ஹர்திக் பண்டியாவுடன் உடன் சேர்ந்து 44 ரன்கள், 6வது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் சேர்ந்து 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க கேஎல் ராகுல் உதவிகரமாக இருந்து, இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய அணியின் இத்தகைய வெற்றிக்கு ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் காரணம் என்று பலரும் பேசி வரும் நிலையில், இவர்கள் காரணம் அல்ல; எங்களது தோல்விக்கு காரணமே வேறு என்று ஸ்டீவ் ஸ்மித் தனது பேட்டியில் பேசியது ஆச்சரியப்படுத்தியது. அவர் கூறியதாவது,

“வான்கடே மைதானத்தில் இப்படி ஒரு ஆட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நன்றாக ஸ்கோர் செய்ய முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. 250 ரன்கள் அடித்திருந்தால் இந்த ஆட்டம் எங்களது பக்கம் மாறியிருக்கும்.

எங்களது தோல்விக்கு முக்கிய காரணமே மிடில் ஓவரில் நிறைய விக்கெடுகளை இழந்தது தான். நல்ல துவக்கம் கிடைத்த பிறகு அதை பயன்படுத்த தவறிவிட்டோம். ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப்கள் எங்களுக்கு வந்திருந்தால் நிச்சயம் நல்ல ஸ்கோரை எட்டியிருப்போம். இந்த இடத்தில் தான் இந்திய அணி நன்றாக செயல்பட்டது.

அழுத்தம் நிறைந்த சூழலில் ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் மிகச் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். எங்களுக்கும் இதுபோன்ற கண்டிஷனில் எப்படி விளையாட வேண்டும் என்று காட்டினர். எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக வீசினார்கள். இரண்டு அணிகளுக்கும் வேகப்பந்து வீச்சு நன்றாக எடுபட்டு, 30 ஓவர்களுக்கும் மேல் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. நாங்கள் நிறைய ரன்கள் எடுக்க தவறிவிட்டோம். இந்த இடத்தில் இந்திய அணி நன்றாக செயல்பட்டது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.