இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யாமல் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்போம் – கேப்டன் ராகுல் ஆதங்கம்

0
207
KL Rahul

நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ராஜட் பட்டிதர் 54 பந்துகளில் 112 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 193 ரன்கள் மட்டுமே குவித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 58 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி கண்டு இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியில் தோல்வி அடைந்த லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

எங்களது தோல்விக்கு இது தான் காரணம்

போட்டி முடிந்ததும் பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் நேற்று நடந்த போட்டியில் தங்களுடைய அணி தோல்வி பெற என்ன காரணம் என்பதை விளக்கினார்.”நாங்கள் வெற்றி பெறாததற்கான காரணங்கள் மிகவும் வெளிப்படையானவை என்று நான் நினைக்கிறேன். களத்தில் எங்களை நாங்கள் ஒரு சில நேரத்தில் தாழ்வு அடைய செய்துவிட்டோம். நேற்றைய போட்டியில் ஈஸியான கேட்சுகளை நாங்கள் தவற விட்டோம். பெங்களூரு அணி மிக அற்புதமாக ஃபீல்டிங் செய்தனர். நாங்கள் மிக சுமாராகவே ஃபீல்டிங் செய்தோம்.

குறிப்பாக பெங்களூரு அணி வீரர் ராஜட் பட்டிதர் மிக அற்புதமாக விளையாடினார் ஒரு அணியில் இருக்கும் முதல் மூன்று வீரர்களில் யாரேனும் ஒருவர் சதம் அடித்தால் அந்த அணி நிச்சயமாக வெற்றி பெறும். இருந்தாலும் நாங்கள் நிறைய பாசிடிவ்வான விஷயங்களை இந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் எடுத்து இருக்கிறோம்.

- Advertisement -

புதிய அணி புதிய வீரர்கள் என்பதால் தவறுகள் செய்வது அவ்வளவு பெரிய தப்பு அல்ல. தவறுகள் அனைத்தையும் திருத்திக் கொண்டு, அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக விளையாட நாங்கள் முயற்சிப்போம். எங்கள் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் மோஷின் தன்னுடைய திறமையால் அனைவரையும் கவர்ந்தார். இன்னும் ஒரு சில விஷயங்களில் அவர் மெருகேறி அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக பந்து வீசுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.