“இந்த மேட்ச் இப்படித்தான்  நடக்கும்னு எங்களுக்கு நல்லா தெரியும்.. ஆனாலும்..” – கேப்டன் ரோகித் சர்மா பேச்சு!

0
522
Rohit

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபாரமான முறையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்து இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 176 மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் முதல் இன்னிங்ஸில் சிராஜ் ஆறு விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா ஆறு விக்கெட் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.

இந்திய அணி பேட்டிங்கில் தனது முதல் இன்னிங்ஸில் 153 ரன்கள் எடுத்தது. இதற்கடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 79 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை மூன்று விக்கெட் இழப்புக்கு 12 ஓவர்களில் எட்டி இந்தியா அபார வெற்றி பெற்றது.

மேலும் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு, கேப்டனாக ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவில் இழக்காமல் இருக்கும் கேப்டனாக மாறியிருக்கிறார். கேப் டவுன் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய கேப்டனாகவும் ரோகித் சர்மா பதிவாகி இருக்கிறார்.

- Advertisement -

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா “இது ஒரு பெரிய சாதனை. முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு நாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. நாங்கள் மிகவும் நன்றாக திரும்பி வந்தோம். எங்கள் பந்துவீச்சாளர்களிடம் சில திட்டங்கள் இருந்தது. எல்லாம் புகழும் அவர்களுக்கு போய்ச் சேரவேண்டும்.

கிட்டத்தட்ட நூறு ரன்கள் முன்னிலைப் பெற நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் கடைசி ஆறு விக்கெட்டுகளை நாங்கள் இழந்த விதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை. இந்தப் போட்டி குறுகியதாக இருக்கும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் முன்னிலை பெறுவது முக்கியமானதாக இருந்தது.

சிராஜ் பந்துவீச்சு சிறப்பு வாய்ந்தது. அப்படியான ஒன்றை அடிக்கடி நீங்கள் பார்க்க முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் எளிமையாக வைக்க விரும்பினோம். மற்றதை ஆடுகளம் செய்யும் என்று நினைப்போம். இறுதியாக அதுதான் நடந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் நால்வரும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.

ஒவ்வொரு முறை தென் ஆப்பிரிக்கா வரும்பொழுதும் அது சவாலான ஒன்று. நாங்கள் இந்தியா தாண்டி நல்ல முறையில் செயல்படுகிறோம். இது குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். தென் ஆப்பிரிக்கா ஒரு சிறந்த அணியாக இருந்து அவர்கள் எப்பொழுதும் எங்களுக்கு சவால் அளிக்கிறார்கள்.

டீன் எல்கர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு மிகவும் முக்கியமான ஒரு வீரர். அவருக்கு நாங்கள் எங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு அடுத்த அமைய இருக்கின்ற எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!