2022 ஐபிஎலில் சிறப்பாக விளையாடத் தவறிய ரியான் பராக் – இளம் வீரர் குறித்து ராஜஸ்தான் இயக்குனர் சங்கக்காரா கூறியது இதுதான்

0
105

ஐபிஎல் தொடரை ஆரம்பித்த முதல் வருடம் ஆன 2008இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன்பின்னர் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னேறியது. இருப்பினும் இறுதிப்போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆரஞ்சு கேப் (அதிக ரன் குவித்த வீரருக்கு வழங்கப்படும் பரிசு) பர்ப்பில் கேப் (அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுபவருக்கு வழங்கப்படும் பரிசு) இந்த இரண்டு விருதையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த பட்லர் மற்றும் சஹால் வென்றனர். ஒரு அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிக சிறப்பாக விளையாடியது என்றுதான் சொல்ல வேண்டும். ஃபேர் பிளே விருதை குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சரிசமமாக பெற்றுக் கொண்டனர்.

- Advertisement -

ரியான் பராத் அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக வருவார்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக் ஒரு சில போட்டிகளை தவிர அவ்வளவு சிறப்பாக ஜொலிக்கவில்லை. அவர் சம்பந்தமாக பேசியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சங்ககாரா, “ரியான் பராக் டெத் ஓவர்களில் மட்டும் நன்றாக விளையாடும் வீரரல்ல. அவரை இனி அடுத்த சீசன் முதல் சற்று மேலே இறக்கி விளையாட முயற்சி செய்ய இருக்கிறோம்.

ஸ்பின் பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட கூடிய திறமை அவருக்கு உள்ளது. அவரை இன்னும் சற்று சிறப்பாக தயார் படுத்தி அடுத்த ஆண்டு முடிந்தவரை ஏர்லி மிடில் ஆர்டரில் விளையாட வைக்க முடிவு செய்துள்ளதாக”, சங்ககாரா கூறியுள்ளார்.

- Advertisement -

ஒரு சில விஷயங்களில் இன்னும் சிறப்பாக அவர் இன்னும் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்

ரவிச்சந்திரன் அஸ்வின் எங்களது அனைத்து நடப்பு ஐபிஎல் தொடரில் அவருடைய பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். இருப்பினும் அவரது தரத்தை ஒப்பிடுகையில் இந்த ஆட்டம் பத்தாது என்று கூறியுள்ளார். ஒரு சில விஷயங்களில் அவர் இன்னும் சற்று ஆழமாக யோசித்து தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சங்கதாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடந்துகொண்டு ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 12 இன்னிங்ஸ்களில் சராசரியாக 27.29 மற்றும் 141.48 ஸ்ட்ரைக் ரேட்டில் 191 ரன்கள் குவித்தார்.மற்றும் 17 இன்னிங்ஸில் 12 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.