“கத்துக்கிட்டது எல்லாத்தையும் காட்டவேண்டிய நேரம் இது” இப்படி சொல்லி தான் தோனி எங்களுக்கு உற்சாகம் கொடுத்தார் – துஷார் தேஷ்பாண்டே பேட்டி!

0
512

ஆர்சிபி போட்டிக்கு முன்னர் தோனி எங்களுக்கு கொடுத்த அட்வைஸ் புதிய உத்வேகத்தை கொடுத்தது என்று பேசியுள்ளார் துஷார் தேஷ்பாண்டே.

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கு ஒரு இன்னிங்சில் 3ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

- Advertisement -

227 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு மேக்ஸ்வெல் மற்றும் டு ப்ளசிஸ் இருவரும் சேர்ந்து அபாரமாக விளையாடி சிஎஸ்கே பவுலர்களை கதன்கலங்க வைத்தனர். இவர்களது விக்கெட் போனபிறகு, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் சிஎஸ்கே அணியில் 218 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே நான்கு ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தாலும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுவும் முக்கியமான கட்டத்தில் எடுக்கப்பட்ட விக்கெட்டுகள் ஆகும்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேசிய அவர், மகேந்திர சிங் தோனி கொடுத்த நம்பிக்கையை பற்றி பகிர்ந்து கொண்டார். துஷார் தேஷ்பாண்டே பேசியதாவது:

- Advertisement -

“தோனி பந்துவீச்சாளர்களை அழைத்து பேசியபோது, ‘நாம் திட்டங்களை பற்றி நிறைய பேசிவிட்டோம். இனி அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. எப்போதுமே கடந்து போன போட்டிகளைப் பற்றி நான் நினைப்பதில்லை. அதிலிருந்து தவறுகளை சரிசெய்து கொண்டு இப்போது என்ன செய்யலாம் என்று நினைக்கக் கூடியவன். டி20 போட்டிகளில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் கட்டுப்படுத்தினால் அடுத்த மூன்று நான்கு ஓவர்களுக்கு அந்த தாக்கத்தை ஏற்படுத்தி ரன்களை கட்டுப்படுத்தலாம். ஆகையால் கொடுக்கப்பட்ட ஓவரில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொண்டு விளையாடுங்கள்.’ என்று அறிவுறுத்தினார்.

ஆகையால் என்னுடைய திட்டத்தில் தெளிவாக இருந்தேன். அதை வெளிப்படுத்த முயற்சி செய்தேன். சின்னசாமி மைதானம் முற்றிலும் மாறுபட்டது. ஒரு பகுதி பெரிதாகவும் இன்னொரு பகுதி சிறியதாகவும் இருந்ததால், பிளானை வெளிப்படுத்த சற்று பிரச்சினையாக இருந்தது. இருப்பினும் டெத் ஓவர்களில் சரி செய்துகொண்டு அணியின் வெற்றிக்கு பங்காற்றியது மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.