இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுவதை நாங்கள் விரும்பவில்லை – இங்கிலாந்து கேப்டன் அதிரடி பேச்சு!

0
6323
Butler

எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது!

இதையடுத்து நாளை இரண்டாவது அரை இறுதி போட்டியில் அடிலைடு மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோத இருக்கிறது!

இங்கிலாந்து அணிக்கு இரண்டு பின்னடைவுகளாக அந்த அணியின் நட்சத்திர இடதுகை பேட்ஸ்மேன் டேவிட் மலான் காயமடைந்திருக்கிறார். மேலும் அந்த அணியின் அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் காயமடைந்து இருக்கிறார். இவர்கள் இருவரும் அணிக்கு திரும்புவார்களா என்று இப்பொழுது வரை உறுதி செய்யப்படவில்லை.

இதே போல் இந்திய அணிக்கு பயிற்சியின் போது நேற்று ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக திரும்பி வந்தார். இன்று அதேபோல் விராட் கோலிக்கு பெரிய அடி விழுந்து ஆனால் பயிற்சிக்கு மீண்டும் திரும்பி வந்தார்.

தற்பொழுது பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்க இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா என்று நிர்ணயிக்கும் அரையிறுதி போட்டிக்கு மென்மேலும் எதிர்பார்ப்புகள் பெருகி இருக்கிறது.

இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேசும் பொழுது
” இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அப்படி ஒரு சூழலை நிச்சயம் கெடுப்போம். ஆனால் இந்திய அணி ஒரு நல்ல அணி. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நாங்கள் விரும்பிய இடத்திற்கு வந்து விட்டோம். எங்கள் வீரர்கள் அனைவரும் அரையிறுதி போட்டியில் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். சிறந்த இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதற்கு நாங்கள் மிகவும் ஆர்வமாக உற்சாகமாக இருக்கிறோம் ” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” டேவிட் மலான் மற்றும் மார்க் வுட் இருவரும் சந்தேகத்திற்கு இடமான நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் போட்டி நாளில் நாங்கள் அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம். எங்களது மருத்துவ குழுவின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மேலும் எங்களுக்கு நல்ல உடற்தகுதி உடைய வீரர்கள்தான் தேவை. பாகிஸ்தான் தொடரில் நாங்கள் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். அவர்கள் அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். இதில் பில் சால்ட் ஒரு அற்புதமான மனநிலையைக் கொண்டவர். குறிப்பாக டி20 யை பொருத்தவரை அவருக்கு சிறப்பாக எப்படி செயல்படுவது என்று நன்றாகத் தெரியும்” என்று கூறியுள்ளார்!