எங்களுக்கு தற்பொழுது வரை சொந்த வீடு இல்லை ; எனக்கு பல கனவுகள் இருந்தாலும் முதல் ஆசை இதுதான் – திலக் வர்மா உருக்கமான பேச்சு

0
943
Tilak Varma Mumbai Indians

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மத்தியில் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவர் மட்டுமே தொடர்ச்சியாக இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடி உள்ளனர்.

குறிப்பாக 19 வயதான திலக் வர்மா முதல் போட்டியில் 15 பந்துகளில் 22 ரன்களும், நேற்று நடந்த முடிந்த இரண்டாவது ஆட்டத்தில் 33 பந்துகளில் 61 ரன்கள் குவித்துள்ளார். அதிரடியான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி, தற்போது அனைவரின் கவனத்தையும் 19 வயது திலக் வர்மா ஈர்த்திருக்கிறார்.

- Advertisement -
தன்னுடைய கனவுகளைப் பற்றி வெளிப்படையாக கூறிய திலக்

எங்களுக்கு சொந்த வீடு தற்போது வரை எனவே இந்த ஐபிஎல் தொடரில் கிடைக்கும் வருவாயை கொண்டு எனது பெற்றோருக்கு ஒரு சிறந்த வீடு வாங்க முடிவு செய்திருக்கிறேன். அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரில் கிடைக்கும் வருமானம் இனி எனது வாழ்நாள் முழுவதும் நான் சுதந்திரமாக விளையாடக் கூடிய ஆடம்பரத்தை கொடுக்கும் என்றும் நம்பிக்கையுடன் திலக் வர்மா பேசியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் எனக்கு நிறைய கனவுகள் இருக்கிறது. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். பின்னர் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தர வேண்டும். இப்படி நிறைய ஆசைகள் மற்றும் கனவுகள் எனக்கு இருக்கிறது. ஆனால் தற்பொழுது இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுத் தருவதிலேயே எனது முழு கவனம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.