“நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் கிடையாது!” – ஜிம்பாப்வே உடன் தோல்விக்கு பிறகு டேரன் சமி வேதனை!

0
6076
Sammy

இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காகத் தற்பொழுது தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது!

நேற்று இந்தத் தகுதி சுற்றில் ஏ பிரிவில் மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

- Advertisement -

மிகவும் பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று, இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இந்தப் போட்டியில் சிக்கந்தர் ராஸாவுக்கு ஒன்று மற்றும் மூன்று ரன்னில் இருந்த பொழுது இரண்டு எளிமையான கேட்ச் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் தவறவிட்டது. அவர் அடுத்து 58 பந்தில் 68 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக விளங்கினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிவிலிருந்து மீட்க அந்த அணிக்காக இரண்டு டி20 உலக கோப்பைகளை வென்ற டேரன் சமி தலைமை பயிற்சியாளராக தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்தத் தோல்விக்கு பிறகு பேசிய அவர்
“இது மிகவும் ஏமாற்றமான ஒன்று.
பீல்டிங் இவ்வளவு மோசமாக இருக்கின்ற காரணத்தால் தான் டாஸ் ஜெயித்தால் நாங்கள் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரருக்கு நீங்கள் கேட்ச் வாய்ப்பை விட்டுக் கொண்டே இருந்தால் உங்களால் ஆட்டத்தில் வெல்ல முடியாது. நாங்கள் வெல்வதற்கு தகுதியானவர்கள் கிடையாது.

இன்று எங்களுக்கு ஆரம்பம் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் நாங்கள் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்கிறோம். இங்கு ஒரு பெரிய பிரச்சனை பொறுப்பை எடுத்துக் கொள்வதாகும். அப்படி செய்யாததுதான் தோல்விக்கு காரணம். எனவே தான் நாங்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்கள் கிடையாது என்று சொல்கிறேன்.

இந்த தோல்வி உலக கோப்பைக்கு நாங்கள் தகுதி பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ஆனால் அதை கடினமாக்கி இருக்கிறது. நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெறவில்லை என்று எங்கள் வீரர்களிடம் நான் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

நாங்கள் எங்கள் நாட்டை விட்டு இங்கு வரும் பொழுதே இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டி என்று மிக நன்றாகவே தெரியும். இன்று நாங்கள் வெற்றி பெறுவதற்காக விளையாடவில்லை. நாங்கள் வெற்றி பெறுவதற்குத் தகுதியற்றவர்கள். இப்போது அடுத்த சுற்று செல்ல சில வேலைகள் இருக்கிறது. அடுத்த சுற்றில் மோத உள்ள அணிகளைப் பற்றி பார்க்க வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்!