நாங்க எங்களோட ஸ்டிரெந்த்ல 50% கூட காட்டல.. அதுக்கே பயந்துட்டாங்க – ஹர்திக் பாண்டியா கெத்து பேட்டி!

0
777

எங்களோட பாதி பலத்தைக்கூட நாங்கள் காட்டவில்லை என கெத்தாக பேசியுள்ளார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

இந்தியா-இலங்கை தொடரின் மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 35 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

- Advertisement -

அடுத்துவந்த சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார். கடைசியில் வந்த அக்சர் பட்டேல் 21 ரன்கள் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு துவக்க ஜோடி குஷால் மெண்டிஸ்(23), நிஷங்கா(15) இருவரும் நல்ல துவக்கம் கொடுக்க, தனஞ்செய டி சில்வா 22 ரன்கள் மற்றும் கேப்டன் ஷனக்கா 17 பந்துகளில் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, நிலையான பார்ட்னர்ஷிப் கிடைக்காததால்,இறுதியில் 16.4 ஓவர்கள் மட்டுமே பிடித்து 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. இதனால் 2-1 என டி20 தொடரை இழந்தது இலங்கை அணி.

தொடரை கைப்பற்றிய பிறகு பேட்டியளித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், சூரியகுமார் யாதவ் ஒவ்வொரு இன்னிங்சில் சிறப்பாக விளையாடி தனது முந்தைய சிறந்த ஆட்டத்தை முறியடித்துக் காட்டுகிறார். அவரது பேட்டிங் மூலம் பேட்டிங் செய்வது மிகவும் எளிது என்பதையும் காட்டுகிறார். இந்த தருணத்தில் அவருக்கு பந்துவீசி இருந்தால் நான் நிச்சயம் மனம் வருந்தி இருப்பேன்.

- Advertisement -

அனைத்திற்கும் முன்னால் ராகுல் திரிப்பாதியை குறிப்பிட்டு பேச வேண்டும் அவர்தான் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு உள்ளே சென்றார். அதேபோல் அக்சர் பட்டேல் எனது அணியில் இருப்பது கூடுதல் பலம். பெருமிதமாகவும் கருதுகிறேன். தேவையான நேரத்தில் பேட்டிங் செய்கிறார். முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கிறார்.

அர்ஷதீப் சிங் இந்த போட்டியில் தன்னை சரி செய்து கொண்டு சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சில போட்டிகளில் தவறு செய்து விட்டார்கள் என்பதற்காக அவர்களை ஒதுக்கி வைக்க முடியாது. எனது வீரர்களை நான் எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுத்து அணியில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்திய அணியில் இருப்பவர்கள் உலகத்தரம் மிக்க வீரர்கள். இந்த டி20 தொடரில் அவர்கள் வெறும் 50 சதவீதம் மட்டுமே வெளிக்காட்டினார்கள் என்று உணர்கிறேன். இன்னும் மிகப்பெரிய சவால்கள் எல்லாம் இவர்களுக்கு காத்திருக்கிறது. அதை நோக்கி செல்வோம்.” என்றார்.