“3 போட்டிகள் முழுதாக நடந்திருந்தால், கதையே வேற” – ஷிகர் தவான் பேட்டி!

0
124

நியூசிலாந்து அணியிடம் ஒருநாள் தொடரை இழந்த பிறகு அதற்கான காரணத்தை விளக்கம் அளித்துள்ளார் தவான்.

நியூசிலாந்து, இந்தியா இரு அணிகள் ஆடிய 3வது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் கிரவுண்டில் நடந்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, ஷ்ரேயாஸ் ஐயர் 49(59), வாஷிங்டன் சுந்தர் 51(64) ரன்கள் எடுத்து ப்இருவர் மட்டுமே பேட்டிங்கில் நம்பிக்கை கொடுத்தனர். இந்தியா 47.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன், டெவான் கான்வெ இருவரும் முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் சேர்த்தனர். பின் ஆலன் 57 ரன்கள் அடித்து உம்ரான் மாலிக் பந்தில் அவுட்டாகினர்.

டெவான் கான்வெ 38*, கேப்டன் வில்லியம்சன் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 18 ஓவர்கள் முடிவில் 104/1 என நியூசிலாந்து அணி இருந்தபோது, வேகமாக மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே தடைபட்டது.

இடைவிடாமல் மழை பெய்ததால் போட்டி எந்தவித முடிவும் இன்றி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவேத்தனர் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரை ஒன்றுக்கு பூஜை மற்றும் கணக்கில் கைப்பற்றியது.

நியூசிலாந்து பணியிடம் தொடரை இழந்த பிறகு பேட்டி அளித்த ஷிகர் தவான், இத்தொடரில் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

“ஒரு நாள் தொடர் எனக்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இளம் வீரர்கள் மற்றும் மோசமான வானிலை என இரண்டும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இப்படியான சூழலில் கேப்டன் குறிப்பு வகித்தது புதிய அனுபவமாகவும் இருந்தது.

வானிலை காரணமாக 2 போட்டிகள் விளையாட முடியாமல் போனது. அப்படி விளையாடி இருந்தால் இத்தொடரானது முற்றிலும் வேறு விதமாக அமைந்திருக்கலாம். அந்த விதத்தில் எனக்கு அதிருப்தியாக இருக்கிறது.

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் தொடரில் விளையாட உள்ளோம். அணிக்கு சீனியர் வீரர்கள் மீண்டும் திரும்புகின்றனர். ஆகையால் அதுதான் எங்களுக்கு தற்போது முக்கியம்.

2023 ஆம் ஆண்டு உலககோப்பைக்கு முன்னர் அது போன்ற மைதானங்கள் தான் உதவிகரமாக இருக்கும். நியூசிலாந்து மைதானம் மற்றும் அதில் செய்த தவறுகள் எங்களை எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. ஆனாலும் தவறுகளை சரி செய்வது மிகப்பெரிய அணிக்கு முக்கியம் என்கிற வகையில் இப்போட்டியில் செய்த தவறுகளை இளம் வீரர்கள் அடுத்த தொடர்களில் திருத்திக் கொள்வார் என்று நம்புகிறேன்.” என்றார்.