ஜானி பேர்ஸ்டோவுக்காக தனது ஓப்பனிங் இடத்தை விட்டுக் கொடுத்த கேப்டன் மயாங்க் அகார்வால் – காரணம் இதுதான்

0
103
Mayank Agarwal and Johny Bairstow

2022 ஐ.பி.எல் சீசனின் 48-வது போட்டியாக நேற்று நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மயங்க் அகர்வாலின்பஞ்சாப் அணியும், ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணி தான் விளையாடிய ஒன்பது ஆட்டங்களில் நான்கை வென்று எட்டுப் புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் எட்டாமிடத்தில் இருந்தது. குஜராத் அணி தான் விளையாடிய ஒன்பது ஆட்டங்களில் எட்டு ஆட்டங்களை வென்று, பதினாறு புள்ளிகளோடு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. நேற்றைய போட்டியில் இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

டாஸை வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பரிசோதனை முயற்சியாக முதலில் பேட் செய்வதென தீர்மானித்தார். குஜராத் அணியின் பேட்டிங்கை துவங்க சுப்மன் கில், விர்திமான் சஹா இருவரும் ஏமாற்ற, இந்த முறை ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரசீத் கான் என பேட்டிங்கில் மொத்த அணியும் ஏமாற்றினர். ஆனால் ஒருமுனையில் நிலைத்து நின்ற தமிழக அணி வீரர் சாய் சுதர்சன் 50 பந்துகளில் 64 ரன்கள் குவித்து, குஜராத் அணியை இருபது ஓவர்களின் முடிவில் 142 ரன்களை எட்ட வைத்தார்.

- Advertisement -

அடுத்து 143 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, இந்த முறை துவக்க ஆட்டக்காரராக ஷிகர் தவான் உடன் ஜானி பேர்ஸ்டோ வந்தார். ஆனாலும் ஜானி பேர்ஸ்டோ நிலைக்கவில்லை. ஆனால் தவான் ஒருமுனையில் பொறுப்பெடுத்துக்கொள்ள, அடுத்து வந்த பானுக ராஜபக்சேவும், லியாம் லிவிங்ஸ்டனும் அடித்து நொறுக்க, பஞ்சாப் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

ஆட்ட முடிவுக்குப் பிறகு பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் “சில வெற்றிகளைத் தொடர விரும்புகிறோம். அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற இதைவிட சிறந்த நேரம் கிடையாது. ஜானி துவக்க வீரராகச் சிறப்பாக ஆடியிருக்கிறார். அதனால் நான் பேட்டிங்கில் நம்பர் 4ல் இறங்கவும், அந்த நிலையில் நின்று ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியுமென்று கூறி ஜானியை ஓபனிங் அனுப்பினோம். லிவிங்ஸ்டன் ஷிகர் உடன் பேட்டிங் செய்ய வேண்டுமென்று தெளிவாகத் தெரிந்தது. அவர் அடித்து விளையாடுவதற்கான நிலைமை இருக்க, அவர் சிறப்பாக விளையாடினார். இதெல்லாம் அமைந்தபோது இரண்டு புள்ளிகள் உறுதியானது” என்று கூறினார்.