டிஆர்எஸ் எடுக்கமுடியாத காரணத்தை பற்றி பேசியுள்ள சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்

0
2593

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலாக நேற்று நடந்து முடிந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பும் முடிவுக்கு வந்தது.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக மகேந்திர சிங் தோனி 36* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 15வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு எளிதாக வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 34* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் பவர் கட் ஆன சம்பவம்

போட்டி ஆரம்பித்த முதல் இரண்டு ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களால் டிஆர்எஸ் முடிவை மேற்கொள்ள முடியவில்லை. மைதானத்தில் பவர் கட் ஆன காரணத்தினால் நடுவர்கள் டிஆர்எஸ் முடிவை எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

- Advertisement -

மும்பை அணி வீரர் டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் கான்வே தனது விக்கெட்டை இழந்தார். எல்பிடபிள்யூ மூலம் அவர் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. அவர் அவுட்டான இதயத்தை மீண்டும் ஓட்டி பார்க்கையில், சாம்ஸ் வீசிய பந்து லெக் ஸ்டும்ப்பை விட்டு நகர்ந்து சென்றது. இருப்பினும் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டது.
டிஆர்எஸ் முடிவு எடுக்க முடியாமல் போனதால் துரதிர்ஷ்டவசமாக கான்வே பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நாங்கள் ஏமாந்து போனோம் – ஸ்டீபன் பிளமிங்

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரண்டு பேட்ஸ்மேன்கள் எல்பிடபிள்யூ மூலம் அவுட் கொடுக்கப்பட்டனர். அந்த இரண்டு முறையும் எங்களால் டிஆர்எஸ் விதிமுறையை மேற்கொள்ள முடியவில்லை. துரதிஷ்டவசமாக மைதானத்தில் பவர் கட்டானது நாங்கள் அதனால் ஏமாந்து போனோம். விளையாட்டில் இதுவும் ஒரு அங்கம் எனவே இதை குறை கூற முடியாது. நாங்கள் ஆரம்பத்தில் இன்னும் சிறப்பாக விளையாடி இருந்திருக்க வேண்டும் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் போட்டி முடிந்ததும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ஒரு சில ஏரியாக்களில் நாங்கள் எங்களை இன்னும் தயார்படுத்தி ஆகவேண்டும். சென்னை அணியில் தற்போது புதிய பந்துகளில் முகேஷ் சவுத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் மிக மிக அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். தீபக் சஹர் அணிக்கு திரும்பும் பட்சத்தில், எங்களது அணியின் வேகப்பந்து வீச்சு இன்னும் பலப்படும் என்று கூறியுள்ளார்.

தொடரில் இருந்து வெளியேறி விட்டதால் இனி அடுத்த இரண்டு போட்டிகளில் எந்தவித நெருக்கடியும் இன்றி இரும்பாக நாங்கள் விளையாடலாம். எனவே அடுத்த இரண்டு போட்டிகளில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களது திறமை என்பதை காண ஆவலாக இருக்கிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னை அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.