ஒற்றை கையில் கேட்ச் பிடித்து, பேட்ஸ்மேனை ஸ்தம்பிக்க வைத்த ஸ்டுவர்ட் பிராட்.. வீடியோ உள்ளே!!

0
65

ரபாடா அடித்த பந்தை ஒற்றை கையில் பிடித்து அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார் ஸ்டுவர்ட் பிராட். இதன் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரை முடித்துவிட்டு, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்சை துவங்கிய தென்ஆப்பிரிக்கா அணி எந்தவித திணறலும் இன்றி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. நல்ல துவக்கம் கிடைத்து விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு, ரபாடா பேட்டிங் செய்தபோது, மேட்டி பாட்ஸ் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயற்சித்தார். அப்போது மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த ஸ்டுவர்ட் பிராட், எகிறிகுதித்து ஒற்றை கையில் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இதனைக் கண்ட ரபாடா சில வினாடிகள் ஸ்தம்பித்து அங்கே நின்று ஆச்சரியத்துடன் பார்த்தார். இந்த நிகழ்வின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகிய தற்போது வைரலாகி உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியை பார்க்கையில், முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. இதன் மூலம் 161 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிசை தொடர்ந்த இங்கிலாந்து அணி இம்முறையும் தென்னாபிரிக்க பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 12 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்ஸ், இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்ஸ் என பந்துவீச்சில் முக்கியமான பங்களிப்பை கொடுத்த ரபாடா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.