யாருமே எதிர்பார்க்காத வகையில் ஸ்ட்ரெய்ட் டிரைவ் பவுண்டரி அடித்து அசத்திய யுஸ்வேந்திர சஹால் – வீடியோ இணைப்பு

0
567
Yuzvendra Chahal Straight drive

இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கேஎல் ராகுல் 49 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் சிறப்பாக பந்து வீசிய அல்சாரி ஜோசப் மற்றும் ஓடியன் ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறது.

ஸ்ட்ரைட் திசையில் பவுண்டரி அடித்து அசத்திய சஹால்

இந்திய அணி 49 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்து இருந்தது. கடைசி ஓவரை அல்சாரி ஜோசப் வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தை மேற்கொண்ட சஹால், துள்ளியமாக அந்த பந்தை கணித்து ஸ்ட்ரைட் திசையில் தூக்கி அடித்தார்.

ஸ்ட்ரைட் திசையில் ஒரு ஃபீல்டர் இருந்தபோதிலும் ஜோசப் வீசிய பந்தின் வேகத்தை கணித்து தன்னுடைய பேட்டை சரியான வகையில் பிடித்து அந்த பந்தை லாவகமாக தூக்கி அடித்தார். அந்த பந்து நேராக நின்று கொண்டிருந்த ஃபீல்டரை தாண்டி பவுண்டரிக்கு சென்றது.

அவர் அடித்த அந்த பவுண்டரி பார்க்க மிக அற்புதமாக இருந்தது. ஒரு முன்னணி பேட்ஸ்மேன் பவுண்டரி அடித்தால் எப்படி இருக்குமோ அதேபோல சஹால் அடித்த அந்த ஷாட் மிக நேர்த்தியாக இருந்தது. அவர் அடித்த அந்த பவுண்டரி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.