13வது ஓவரிலேயே ஆட்டமிழந்த ரஸல் ; திடீரென நடுவர் நோபால் அறிவித்ததால் குஜராத் அணி வீரர்கள் அதிர்ச்சி – வீடியோ இணைப்பு

0
513
Umpire gives No ball for Russell wicket

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 35-வது ஆட்டம், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே, படு பரபரப்பாக நடந்து வருகிறது.

முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக, இந்தத் தொடரில் முதன் முதலாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார். குஜராத் அணியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு கேப்டன் ஹர்திக் திரும்பி இருந்தார். கொல்கத்தா அணியில் பில்லிங்ஸ், சவுதி உள்ளே வர, பின்ச், கம்மின்ஸ் வெளியே போயிருந்தார்கள்.

- Advertisement -

முதலில் பேட் செய்ய வந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் சிறப்பான அரைசத ஆட்டத்தால் 180 ரன்களை எட்டும் என்றிருந்த நிலைமாறி, கடைசிக்கட்ட வீரர்கள் வரிசையாக சொதப்பியதால். குஜராத் அணி இருபது ஓவர்களின் முடிவில் 156 ரன்களை எடுத்தது.

அடுத்துக் கொல்கத்தாவுக்காக களமிறங்கிய பில்லிங்ஸ், நரைன், ஸ்ரேயாஷ், வெங்கடேஷ், ராணா என்று வரிசையாக ஏமாற்ற, ரிங்கு சிங் மட்டுமே நம்பிக்கை தந்து ஆட்டமிழந்தார். இதற்கு பிறகு வந்த அதிரடி ரஸல் பவுண்டரி ஒன்றை யாஷ் தயால் ஓவரில் அடிக்க, அடுத்த பந்தில் பவுன்ஸ் அடிக்க, டீப் பைன் லெக்கில் ஷமியிடம் கேட்ச் ஆனார் ரஸல். ஆனால் அதை தேர்ட் அம்பயர் நோ-பால் என்று தப்பித்த ரஸல் சிக்ஸர்களாக வெளுத்துத் தள்ளி, இறுதியாக அர்ஜாரி ஜோசப் ஓவரில் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்!