அறிமுக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்து வாஷிங்டன் சுந்தர் சாதனை – வீடியோ இணைப்பு

0
235
Washington Sundar

தற்போது இங்கிலாந்தில் உள்நாட்டு கவுன்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் ரஞ்சி டெஸ்ட் போட்டி தொடர் போலலானது கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர். இதில் ஒரே வித்தியாசம் என்னவென்றால் ரஞ்சி தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாது; கவுன்டி தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கலாம்!

சில ஆண்டுகளாக கவுன்டி போட்டிகளில் ஆடுகளம் தட்டையாக அமைக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் சரிவை சந்திந்தது. இதனால் மீண்டும் கவுன்டி போட்டிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பேட்டிங், பவுலிங் பார்ம் இழந்த வீரர்கள் பார்ம்க்கு திரும்ப, ஒரு சிறப்பான பயிற்சி களம் கவுன்டி போட்டிகள். போட்டிகள் தரத்தோடு இருக்கும். மேலும் இங்கிலாந்தின் ஸ்விங் கன்டிசனில் விளையாடுவது எப்பொழுதும் சவாலானது!

- Advertisement -

இந்திய வீரர்கள் சிலர் இந்த வருட கவுன்டி சீசனில் விளையாடி வருகிறார்கள். நேற்று செதேஷ்வர் புஜாரா சசக்ஸ் அணிக்கு கேப்டனானதோடு, லார்ட்ஸில் நடந்த மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 231 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த வருட கவுன்டி சீசனில் இது அவருக்கு மூன்றாவது இரட்டை சதமாகும். மேலும் ஐந்தாவது சதமாகும். 118 வருட சசக்ஸ் அணியின் கவுன்டி வரலாற்றில், ஒரு சீசனில் அந்த அணிக்காக மூன்று இரட்டை சதங்களை ஒரே சீசனில் அடித்த பேட்ஸ்மேன் புஜாராதான்.

அடுத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி கென்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் வார்க்விசைர் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணியின் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிடில்சக்ஸ் அணிக்காக விளையாடுகிறார்!

இவர்கள் இல்லாமல் இந்தியாவின் ஆப்-ஸ்பின் ஆல்ரவுண்டர் வாசிங்டன் சுந்தரும் இங்கிலாந்து கவுன்டி லங்காஷயர் அணிக்காக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். லங்காஷயர் அணிக்காக முதன் முதலில் நேற்று நார்த்தாம்டன்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை அறிமுக போட்டியிலேயே கைப்பற்றி அசத்தி இருக்கிறார்!

- Advertisement -

நார்த்தாம்டன்ஷயர் அணிக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் வில் யங், ராப் கியோக், ரியான் ரிக்லெட்டன், டாம் டெயிலர் என நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அடுத்த நாள் ஆட்டத்தில், அதிக ஸ்கோர் எடுத்து களத்தில் இருந்த லூயிஸ் மெக்மான்ஸை வீழ்த்தி ஐந்து விக்கெட்டுகளை 76 ரன்களுக்கு வீழ்த்தி, லங்காஷயர் அணிக்கு நல்ல ஆரம்பத்தை உருவாக்கினார். ஆனால் நார்த்தம்டன்ஷயர் பந்துவீச்சாளர்கள் லங்காஷயர் அணியை 132 ரன்களுக்கு சுருட்டி, அடுத்து 25/1 என 128 ரன்கள் முன்னிலையோடு தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். வாஷிங்கடன் சுந்தர் ஐந்து ரன்களுக்கு பேட்டிங்கில் ஆட்டமிழந்தார்!