கிரிக்கெட்

இடைவேளையின் போது தந்தையாக மாறி மகளை நோக்கி பாசதைச் செலுத்திய விராட் கோலி – வீடியோ இணைப்பு

இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டி என்பதால் மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 79 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் நாள் முடிவில் 210 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கீகன் பெட்டர்சன் 72 ரன்கள் குவித்தார்.

13 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தற்போது 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்து சிறப்பான நிலையில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 89* ரன்கள் குவித்து தற்பொழுது சிறப்பாக விளையாடி வருகிறார்.

உணவு இடைவேளையில் தனது மகளிடம் கொஞ்சிய விராட் கோலி

போட்டியின் 3-வது நாள் ஆட்டம் இன்று இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்னர் 43 ஓவர்களில் 130 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடி வந்தனர். சரியாக உணவு இடைவேளைக்கு அவர்களிருவரும், விராட் கோலியின் மகளான வாமிகா தனது தந்தையை வரவேற்றார்.

- Advertisement -

தனது மகளைக் கண்ட விராட் கோலி அங்கேயே நின்று மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் முக பாவனைகளை மாற்றி கொஞ்சி விளையாடினார். விராட் கோலியின் மகளான வாமிகாவின் புகைப்படம் இதுவரை சமூக வளைதளத்தில் வெளியானதில்லை. விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து தங்களது மகளின் புகைப்படம் வெளியே தெரியாதவாறு தற்போதும் ரகசியம் காத்து வருகின்றனர்.

தனது மகளிடம் கொஞ்சி விளையாடும் விராட் கோலியின் வீடியோவில் கூட விராட் கோலியின் மகளான வாமிகா இடம் பெறவில்லை. இருப்பினும் விராட்கோலி ஒரு நிமிடம் தந்தையாக மாறி தூரத்தில் இருந்தவாறே சந்தோசமாக தனது மகளிடம் கொஞ்சி விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Published by