பந்து பேட்டில் உரசியும் நாட் அவுட் வழங்கியதால் கடுப்பான தென் ஆப்ரிக்க வீரர்கள் ; விராட் கோஹ்லி எல்கர் இடையே பேச்சுவார்த்தை – வீடியோ இணைப்பு

0
1730
Virat Kohli Ultraedge 3rd SA

முதல் போட்டியில் தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை சமன் செய்தது. தற்போது கோப்பையை யார் வெள்ளப் போகிறார் என்பதை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் கேப்டவுனில் இன்று ( ஜனவரி 11 ) தொடங்கியது. காயம் காரணமாக 2வது டெஸ்ட்டிலிருந்து விலகிய கோஹ்லி மீண்டும் வந்துள்ளார். டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்கள் ராகுல் – அகர்வால் 11 ஓவர்கள் சமாளித்தப் பிறகு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து தவித்துக் கொண்டிருந்த அணியை புஜாரா – கோஹ்லி ஜோடி ஓரளவு மீட்டது. இருவரும் இணைந்து 63 ரன்கள் சேர்த்தனர். புஜாரா 43 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

- Advertisement -

அடுத்து வந்த ரஹானேவும் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். விராட் கோஹ்லி மட்டும் ஒரு பக்கம் நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார். எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை மிகவும் பொறுமையாக விளையாடினார். முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், “ கடந்த 5/6 ஆண்டுகளில் இப்போட்டியில் தான் முதல் 40 ரன்களை சேர்க்க கோஹ்லி மிகவும் சிரமப்பட்டுள்ளார் ” என்றார். 6/7வது ஸ்டெம்ப்பில் போடப்படும் பந்துகளை சந்தித்து விக்கெட்டை இழக்க கூடாது என்பதில் கோஹ்லி தெளிவாக இருந்தார். 66 சதவீத பந்துகளை ஆடாமல் விட்டார்.

நூழையில் தப்பித்த விராட் கோஹ்லி

இரண்டாவது செசனில் இடைவேளைக்குப் சிறிது நிமிடங்கள் முன், 52 ஓவரின் 4வது பந்தில் விராட் கோஹ்லி அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தார். லெக் சைடு திசையில் ஒலிவியர் வீசிய பந்தை விராட் கோஹ்லி அடிக்க முயன்றார். அதைக் கீப்பர் கேட்ச் பிடித்துவிட்டு அம்பயரிடம் அவுட் கேட்டார்.

மூன்றாவது நடுவர் அல்ட்ராஎட்ச்சில் அப்பந்தைப் பார்த்தார். பந்து கோஹ்லியின் பேட்டைக் கடந்து செல்லும் போது சிறிய ஸ்பைக் இருப்பது தெரிந்தது. அதைப் பார்த்த தென்னாபிரிக்கா வீரர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். ஆனால் மறுபக்கம் பார்க்கையில் பேட்டிற்கும் பந்திற்க்கும் இடையே இடைவேளை இருந்தது. அதனால் மூன்றாவது நடுவர் நாட் அவுட் என்று அறிவித்தார். கேப்டன் கோஹ்லி நூழினையில் தப்பித்துக் கொண்டார்.

- Advertisement -

நடுவரின் இம்முடிவை தென்னாபிரிக்கா வீரர்கள் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இரு கேப்டன்களும் சிறிய புன்னகையுடன் எதோ பேசிக்கொண்டனர். எல்கர் ஏமாற்றத்துடன் விராட் கோஹ்லியின் தலையை தடவி தட்டிக் கொடுத்தார். மிகவும் எச்சரிக்கையாக விளையாடிக்கொண்டு இருக்கும் கோஹ்லி தனது 71வது சதத்தை அடையும் பணியில் பாதிக் கடலைத் தாண்டிவிட்டார். இம்முறை சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.