ரோஹித் ஷர்மவை வற்புறுத்தி டி.ஆர்.எஸ் எடுக்க சொல்லி இந்திய அணிக்கு மிகப் பெரிய விக்கெட்டை பெற்றுத் தந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
1308
Jos Buttler caught behind

இந்திய அணி ஒரு டெஸ்ட் மற்றும் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாஞ இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் இந்திய அணி தோற்று இருந்தது. இதையடுத்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்தது!

இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய அணியில் ரிஷாப் பண்ட், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீட் பும்ரா இடம்பெற, நான்கு வீரர்கள் நீக்கப்பட்டு இருந்தனர்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மாவோடு துவக்க ஆட்டக்காரராக ரிஷாப் பண்ட் களமிறங்கினார். இருவரும் அதிரடியாய் விளையாட 5 ஓவர்களில் 49 ரன்கன் முதல் விக்கெட்டுக்கு வந்தது. ஆனால் இதற்கடுத்து இங்கிலாந்தின் ரிச்சர்ட் கிளெஸ்ஸன், கிறிஸ் ஜோர்டானின் சிறப்பான பந்து வீச்சால் 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணியை இழந்துவிட்டது. ஆனால் ஒருமுனையில் நின்ற ரவீந்திர ஜடேஜா 29 பந்தில் 46 ரன்கள் குவிக்க, இந்திய அணி இருபது ஓவர்களின் முடிவில் 170 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 171 என்ற இலக்கோடு இங்கிலாந்து அணி களமிறங்கியது. முதல் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் சந்தித்த முதல் பந்திலேயே அவரை வெளியேற்றிய புவனேஷ்வர்குமார் இந்தமுறை ஜேசன் ராயை ஆட்டத்தின் முதல் பந்திலேயே வெளியேற்றினார்.

இதையடுத்து அவரின் இரண்டாவது ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்டை முன்னே வந்து நிற்க வைத்து ஜோஸ் பட்லருக்கு வீசினார். இதில் பந்து பேட்டின் கீழே பட்டுப்போக, அதை விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் பிடித்து அப்பீல் செய்ய, அம்பர் அவுட் தரவில்லை. ஆனால் விராட் கோலி அதை உறுதியாக அவுட் என்று கேப்டன் ரோகித் சர்மாவிடம் வலியுறுத்தி அப்பீல் செய்ய வைத்தார். ரீ-பிளேவில் பந்து பேட்டின் கீழே பட்டிருந்தது தெளிவாகத் தெரிய, ஜோஸ் பட்லர் வெளியேறினார். விராட் கோலி களத்தில் எப்பொழுதும் கவனமாகவும், முழு அர்ப்பணிப்போடும் செயல்படுவதற்கு இதுவொரு நல்ல உதாரணம்!

- Advertisement -