அவர் தனி காட்டு ராஜா ; அவர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு ; ஷேன் வார்னே குறித்து விராட் கோலி பேசியது – வீடியோ இணைப்பு

0
142
Virat Kohli about Shane Warne death

1992 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் சுமார் 15 வருடகாலம் ஆஸ்திரேலிய அணியில் கொடி கட்டி பறந்த ஒரு பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. ஆஸ்திரேலிய அணியில் மட்டுமல்லாது உலக அளவில் அனைத்து எதிர் அணிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அவர் விளையாடி வந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள், ஐந்து முறை ஆஷஸ் வெற்றி, ஒரு முறை உலகக் கோப்பை வெற்றி, முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கேப்டன் என்கிற பல பெருமைக்கு ஷேன் வார்னே சொந்தக்காரர் ஆவார். லெக் ஸ்பின் பந்து வீச்சில் அனைத்து இளம் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு முன்னோடியாக இன்றுவரை ஷேன் வார்னே திகழ்ந்து வருகிறார்.

அப்பேர்பட்ட பெயருக்கு பெருமைக்கு சொந்தக்காரரான அவர் நேற்று எதிர்பாரதவிதமாக இம்மண்ணை விட்டு பிரிந்தார். தாய்லாந்தில் தன்னுடைய இல்லாமல் வசித்து வந்த அவர் நேற்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய இழப்பை நம்பமுடியாத அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது அவருடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

அவர் எப்பொழுதும் ராஜா தான்

அவருடைய இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில் ஒரு பதிவிட்டார்.”அவருடைய இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையே எப்பொழுதும் நம்மால் கணிக்க முடியாது அது ஒரு புரியாத புதிர்.

கிரிக்கெட் விளையாட்டில் தலைசிறந்த ஒப்பற்ற வீரர் அவர். அவரை கிரிக்கெட்டுக்கு வெளியே ஒரு மனிதராக நிறைய எனக்கு தெரியும். அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ப சிறந்த வீரர் அவர் என்று அவருக்கு தன்னுடைய பதிவின் மூலம் அஞ்சலி செலுத்தினார்.

ஷேன் வார்னே சம்பந்தமாக மேலும் நேற்று பேசிய அவர் “ஸ்பின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஷேன் வார்னே எப்போதும் ராஜா தான். அவர் ஆட்டத்தில் கொண்டு வந்த தன்னுடை ஆளுமை மற்றும் கவர்ச்சியை ஒருபொழுதும் யாரும் மறந்துவிட முடியாது. அவரை நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் அவருடைய இழப்பு மிகப்பெரிய இழப்பு என்றும் விராட்கோலி கனத்த இதயத்துடன் கூறி முடித்தார்.