“ தயவு செய்து குழந்தையைப் புகைப்படம் எடுக்காதீர்கள் ” பத்திரிக்கையாளர்களிடம் விராட் கோலி முன்வைத்த கோரிக்கை – வைரலாகி வரும் வீடியோ இணைப்பு

0
444
Virat Kohli requests not to take Photograph of his Baby

இந்திய அணி வீரர்கள் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த இரு அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கி அடுத்த வருடம் ஜனவரி 23ஆம் தேதி வரை இத்தொடர்கள் நடைபெற இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக பயோ பபுளில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்த வீரர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவுக்கு மும்பையில் இருந்து கிளம்பினர். இந்திய அணி வீரர்கள் அனைவரும் கிளம்பும் வேளையில், விராட் கோலியின் மகளை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றனர். அப்பொழுது விராட் கோலி பணிவாக புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மகளின் முகத்தை தற்பொழுது வரை காட்டாத விராட் மற்றும் அனுஷ்கா ஜோடி

இந்திய வீரர் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வாமிகா கோலி என்று இவர்கள் பெயரிட்டனர். குழந்தை பிறந்த அன்றிலிருந்து இன்றுவரை, குழந்தையின் முகத்தை வெளிப்படையாக இவர்கள் இருவரும் காண்பிக்கவில்லை.

சமூக வலைதளங்களில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் பதிவிடும் பொழுது கூட, தங்களது குழந்தையின் முகம் தெரியாதவாறே ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்து பார்த்து இவர்கள் வெளியிடுவார்கள். இந்நிலையில் மும்பையில் பத்திரிக்கையாளர்கள் குழந்தையை புகைப்படம் எடுக்க முயன்ற பொழுது விராட் கோலி கீழே இறங்கி வந்து பத்திரிக்கையாளர்களிடம், ப்ளீஸ் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பணிவாக கேட்டுக்கொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் வரலாற்றுச் சாதனை படைக்குமா இந்தியா ?

வீரர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்று அங்கே பயிற்சி ஆட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் வென்றதில்லை. அதை திருத்தி அமைக்கும் விதத்தில் இம்முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் அனைத்து இந்திய ரசிகர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.